திமுக வேட்பாளரை தகுதி நீக்கம் செய்திருக்க வேண்டும் - அன்புமணி இராமதாஸ் பரபரப்பு பேட்டி! - Seithipunal
Seithipunal


விக்கிரவாண்டி சட்டமன்ற இடைத்தேர்தலில் திமுக வேட்பாளர் சிவா 1,24,053 வாக்குகள் பெற்று வெற்றிபெற்று உள்ளார். மேலும் அவர் 67757 வாக்குகள் வித்தியாசத்தில் அபார வெற்றியை பதிவு செய்துள்ளார். திமுக எதிர்பார்த்ததை விட கூடுதலாக 17000 வாக்குகள் விதியசத்தில் வெற்றி கிடைத்துள்ளது.

இரண்டாவது இடத்தில் பாமக வேட்பாளர் 56,296 வாக்குகளை பெற்றுள்ளார். மூன்றாவது இடத்தில் நாம் தமிழர் கட்சி வேட்பாளர் அபிநயா 10,602 வாக்குகளை பெற்றுள்ளார். மேலும் இந்த தேர்தலில் திமுக, பாமகவை தவிர, நாம் தமிழர் கட்சி உட்பட 27 வேட்பாளர்கள் டெபாசிட் இழந்துள்ளனர்.

விக்கிரவாண்டி இடைத்தேர்தல் முடிவுகள் குறித்து பாட்டாளி மக்கள் கட்சியின் தலைவர் அன்புமணி இராமதாஸ் தெரிவிக்கையில், "விக்கிரவாண்டி இடைத்தேர்தல் முடிவை முழுமையாக நாங்கள் ஏற்றுக் கொள்கிறோம். 

33 திமுக அமைச்சர்கள், 30 எம்பிக்கள் இந்த விக்கிரவாண்டி தொகுதியில் முகமிட்டு வாக்காளர்களுக்கு பணம் கொடுத்தனர். இந்த பணம், தங்களது அதிகாரத்தை வைத்து விக்கிரவாண்டியில் திமுக வெற்றி பெற்றுள்ளது.

ஆனால் ஒரு பைசா கூட வாக்காளர்களுக்கு பணம் கொடுக்காமல் 56 ஆயிரம் வாக்குகளை பெற்று. நாங்கள் வெற்றி பெற்றுள்ளோம். இந்த இடைத்தேர்தலில் திமுகவின் பணப்பட்டுவாடாவை தேர்தல் ஆணையம் கண்டு கொள்ளவே இல்லை. 

விக்கிரவாண்டியில் அவ்வளவு நடந்தும், தேர்தல் ஆணையம் கண்டுகொள்ளவில்லை. தேர்தல் ஆணையம் இருக்கிறதா என்பதே தெரியவில்லை.

பணப்பட்டுவாடா, பரிசு பொருள் தந்து இடைத்தேர்தலை ஜனநாயக கேலிக்குத்தாக்கி உள்ளது திமுக. நேர்மையான தேர்தல் நடந்திருந்தால் திமுக வேட்பாளரை தேர்தல் ஆணையம் தகுதி நீக்கம் செய்திருக்க வேண்டும்" என்று அன்புமணி இராமதாஸ் தெரிவித்தார். 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

PMK Anbumani Ramadoss Say About Vikravandi Election Result


கருத்துக் கணிப்பு

சென்னையில் ஃபார்முலா கார் ரேஸ் தேவைதானா?



Advertisement

கருத்துக் கணிப்பு

சென்னையில் ஃபார்முலா கார் ரேஸ் தேவைதானா?




Seithipunal
--> -->