சமூகநீதியே எங்கள் உயிர் மூச்சு !1987 போராட்டம் ட்ரைலர்..இனிதான் படமே! அதிரடி காட்டும் டாக்டர் ராமதாஸ்! - Seithipunal
Seithipunal


வன்னியர் சங்கம் சார்பில் 1987 ஆம் ஆண்டு அனைத்து ஜாதியினருக்கும் இட ஒதுக்கீடு வேண்டி நடைபெற்ற போராட்டத்தை விட, வன்னியர்களுக்கான 10.5 சதவீத உள் ஒதுக்கீடு போராட்டம் தமிழ்நாடு ஸ்தம்பிகின்ற அளவில் இருக்கும் என பாமக நிறுவனர் மருத்துவர் ராமதாஸ் தெரிவித்துள்ளார்.

பாமக நிறுவனர் மருத்துவர் ராமதாஸ் அவர்களால் தோற்றுவிக்கப்பட்ட வன்னியர் சங்கம்  44 ஆண்டுகளை நிறைவு செய்து 45 வது ஆண்டில் அடியெடுத்து வைத்துள்ளது. அதனை முன்னிட்டு மருத்துவர்  ராமதாஸ் அவர்கள் தைலாபுரம் தோட்டத்தில் உள்ள வன்னியர் சங்கத்தின் கோடியை ஏற்றி வைத்தார்.

வன்னிய சங்க நிர்வாகிகள் மற்றும் பாமக நிர்வாகிகளுக்கு இனிப்புகளை வழங்கினார். அப்போது வன்னியர் சங்கத் தலைவர் பு.தா அருள்மொழி மற்றும் பாமக கௌரவ தலைவர் ஜி.கே மணி உள்ளிட்ட முக்கிய நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

வன்னியர் சங்கம் ஆரம்பித்த நாள் முதல் சமூக நீதியை அதன் உயிர் மூச்சாக கொண்டு தமிழ்நாட்டில் சமூகநீதி குறித்து விழிப்புணர்வுகளையும் போராட்டங்களையும்  நடத்தி உள்ளது. வன்னியர்  சங்கம் சார்பில் 1987 ஆம் ஆண்டு அனைத்து ஜாதியினருக்கும் இட ஒதுக்கீடு வேண்டி நடைபெற்ற 7 நாள் சாலை மறியல் போராட்டம் உலகளவில் பேசப்பட்டது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில், தைலாபுரம் தோட்டத்தில் செய்தியாளர்களை சந்தித்த பாமக நிறுவனர்  டாக்டர் ராமதாஸ் தெரிவித்ததாவது, வன்னியர் சங்கம் 44 ஆண்டுகளை நிறைவு செய்து 45 ஆவது ஆண்டின் அடி எடுத்து வைக்கிறது. வன்னியர்களுக்கான 10.5 செய்வது உள் ஒதுக்கீடு தமிழகம் ஸ்தம்பிகின்ற அளவில் போராட்டம் நடைபெறும்.

1987 ஆம் ஆண்டு நடைபெற்ற 7 நாள் சாலை மறியல் போராட்டத்தை விட  வன்னியர்களுக்கான உள் ஒதுக்கீடு போராட்டம் தமிழ்நாடு ஸ்தம்பிகின்ற அளவில் இருக்கும். இட ஒதுக்கீடு குறித்த புரிதல் இளைஞர்களிடையே சென்று அடைந்துள்ளது என்று தெரிவித்துள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Pmk Founder Dr Ramadoss press meet


கருத்துக் கணிப்பு

சென்னையில் ஃபார்முலா கார் ரேஸ் தேவைதானா?



Advertisement

கருத்துக் கணிப்பு

சென்னையில் ஃபார்முலா கார் ரேஸ் தேவைதானா?




Seithipunal
--> -->