நடிகர் மயில்சாமி சிறந்த மனிதநேயர் - பாமக தலைவர் அன்புமணி இராமதாஸ் இரங்கல்! - Seithipunal
Seithipunal


நடிகர் மயில்சாமி மறைவுக்கு பாமக தலைவர் மருத்துவர் அன்புமணி இராமதாஸ் இரங்கல் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்த அவரின் செய்திக்குறிப்பில், "தமிழ்த் திரைப்பட நடிகர் மயில்சாமி உடல்நலக் குறைவால் சென்னையில் இன்று காலமானார் என்ற செய்தியறிந்து மிகுந்த வேதனையடைந்தேன்.
 
நடிகர் மயில்சாமி சிறந்த மனிதநேயர். திரைப்படங்களில் நடிப்பதன் மூலம் தாம் ஈட்டிய வருவாயில் ஒரு பகுதியை ஏழை மக்களுக்கு வழங்கி வந்தவர். 

கொரோனா பெருந்தொற்று காலத்தில் வருவாய் இல்லாமல் தவித்த மக்களுக்கு உணவு உள்ளிட்ட பல்வேறு உதவிகளை வழங்கியவர். 

அவரை இழந்து வாடும் குடும்பத்தினர், நண்பர்கள், உறவினர்கள், திரைத்துறையினர் உள்ளிட்ட அனைவருக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபங்களையும் தெரிவித்துக்கொள்கிறேன்."


இதேபோல் அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் விடுத்துள்ள இரங்கல் செய்தியில், "பிரபல நடிகர் மயில்சாமி அவர்கள் திடீரென உயிரிழந்த செய்தி அறிந்து அதிர்ச்சியடைந்தேன். பலகுரல் கலைஞராக திகழ்ந்ததோடு திரைப்படங்களில் நகைச்சுவை கதாபாத்திரங்களில் நடித்து மக்களை மகிழ்வித்தவர்.

அரசியல் ஆர்வமிக்கவராக இருந்த மயில்சாமி, புரட்சித்தலைவி அம்மா அவர்கள் மீது மிகுந்த மரியாதை கொண்டவர். நலிந்த திரைக்கலைஞர்களுக்கு பல்வேறு உதவிகளைச் செய்து அவர்களின் மனதில் இடம் பெற்றவர்.

இந்தத் துயரமான தருணத்தில் மயில்சாமியின் குடும்பத்தினருக்கும், சக திரைக்கலைஞர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துகொள்கிறேன்.
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

PMK Head Anbumani Ramadoss Mourning to Mayilsami death


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->