கபடி களத்தில் உயிரை விட்ட கடலூர் இளைஞர்! குடும்பத்திற்கு கைகொடுக்க உறுதியளித்த பா.ம.க!  - Seithipunal
Seithipunal


கடலூர் மாவட்டம், பண்ருட்டி அருகே உள்ள பெரியபுறங்கணி கிராமத்தைச் சேர்ந்தவர் விமல்ராஜ். இவர் சேலம் தனியார் கல்லூரியில் பி.எஸ்.சி இரண்டாம் ஆண்டு படித்து வருகிறார். கபடி வீரரான இவர் சேலத்தில் உள்ள கபடி அகாடமி ஒன்றில் பயிற்சி பெற்று வருகிறார்.

இந்த நிலையில், பண்ருட்டி அருகே உள்ள மானடிகுப்பத்தில் நடைபெற்ற கபடி போட்டியில் பங்கேற்று புறங்கணி அணிக்காக விளையாடினார். அப்போது, எதிர்பாராத விதமாக கீழே விழ, அதே கணத்தில், எதிர் அணியை சேர்ந்த வீரர் மடக்கி பிடித்தார். கண்ணிமைக்கும் நேரத்திற்குள் நடந்துவிட்ட சம்பவத்தில், மயங்கி விழுந்தவர் எழுந்திருக்கவே இல்லை. உடனடியாக சிகிச்சைக்காக பண்ருட்டி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.

அங்கு விமலை பரிசோதித்த மருத்துவர்கள், ஏற்கனவே  இறந்துவிட்டதாக தெரிவித்துள்ளனர். பிரேத பரிசோதனைக்கு பின்னர், வெற்றிக்கோப்பையுடன் நல்லடக்கம் செய்தனர். 

இதனிடயே இறந்த இளைஞன் விமல் உடலுக்கு அஞ்சலி செலுத்த வந்த பாமக முன்னாள் மாவட்ட செயலாளர் வடக்குத்து ஜெகன், விமலின் சகோதரியின் உயர்கல்வி செலவை முழுமையாக ஏற்றுக்கொள்வதாக கூறி ஆறுதல் தெரிவித்தார். ஜெகன் கடந்த சட்டமன்ற தேர்தலில் நெய்வேலி தொகுதியில் சொற்ப வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றியை நழுவ விட்டவர் என்பது குறிப்பிடத்தக்கது. 

விமலின் தந்தை ஏற்கனவே விபத்து ஒன்றில் ஒற்றை கண் பார்வையை இழந்தவர். குடும்பத்தின் நம்பிக்கையாக இருந்த விமலின் மறைவு அந்த பகுதி மக்களின் நெஞ்சங்களை கணக்கச் செய்தது. இந்த தருணத்தில் பாமக நிர்வாகி ஜெகனின் உறுதியளித்து சற்று ஆறுதல் படுத்தியது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

PMK Jagan give Assurance to Vimalraj sister's Study


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->