தமிழர்களிடையே வரவேற்பை பெற்ற அறிவிப்பு! 10 வருடங்களுக்கு முன்பே அறிவித்திருக்கும் பாமக!  - Seithipunal
Seithipunal


கர்நாடகாவில் உள்ள இந்தியத் தொல்லியல் துறை கல்வெட்டுப்பிரிவில் உள்ள தமிழ்கல்வெட்டுப் பிரதிகள் மற்றும் அதனுடன் தொடர்புடைய அனைத்து ஆவணங்களையும் சென்னை இந்தியத் தொல்லியல் துறை சென்னைப் பிரிவிடம் ஒப்படைக்க தலைமை இயக்குநர் ஆணை வழங்கியுள்ளார்.

தமிழர்கள் பாராட்டும் செயலாக இது அமைந்துள்ளது. தற்போது மிகப்பெரிய வரவேற்பை பெற்ற இந்த விவகாரத்தினை 10 வருடங்களுக்கு முன்பே செய்ய வேண்டும் என பாட்டாளி மக்கள் கட்சி பேசியது தெரியவந்துள்ளது. 

"மைசூரில் வைக்கப்பட்டிருக்கும் தமிழ் கல்வெட்டுகளை சென்னைக்கு மாற்ற வேண்டும்" எனும் பாமகவின் 2011 தேர்தல் அறிக்கை கோரிக்கை, நீதியரசர் கிருபாகரன் 2021 உத்தரவால் செயல்பாட்டுக்கு வந்துள்ளது. 

இந்தியாவில் இதுவரை கண்டறியப்பட்ட மிகப்பெரும்பான்மையான கல்வெட்டுகள் தமிழ் கல்வெட்டுகளே ஆகும். தமிழ்நாட்டில் பாதுகாக்கப்பட்ட தமிழக கல்வெட்டு படிகள், நினைவுச் சின்னங்கள், 1966-ம் ஆண்டு மைசூருக்கு எடுத்துச்செல்லப்பட்டன. 

மைசூர் கல்வெட்டியல் துறையில் உள்ள, இந்தியாவில் கண்டறியப்பட்ட ஒரு லட்சம் கல்வெட்டுகளில், 65 ஆயிரம் கல்வெட்டுகள் தமிழுடன் தொடர்புடையவை. இந்த கல்வெட்டுகள் தற்போது வரை புதுப்பித்து வெளியிடப்படவில்லை.

இவற்றை சென்னைக்கு மாற்ற வேண்டும், பதிப்பிக்க வேண்டும், என்று பாமகவின் 2011 தேர்தல் அறிக்கையில் கோரப்பட்டது. 
இந்நிலையில், மைசூரில் உள்ள தமிழ்க் கல்வெட்டுகளை சென்னைக்கு இடமாற்றம் செய்ய உயர்நீதிமன்றத்தில் நீதியரசன் கிருபாகரன் அமர்வு கடந்த 2021 ஆகஸ்ட் மாதம் உத்தரவிட்டிருந்தது. 

அதன்படி, தமிழ் கல்வெட்டுகள் அனைத்தும் இனி தமிழகத்திற்கே இடமாற்றம் செய்ய வேண்டும் என்றும் இந்திய தொல்லியல்துறை தற்போது ஆணை பிறப்பித்துள்ளது. 

தொல்லியல் துறையில் உள்ள கல்வெட்டியல் பிரிவு உள்ளிட்ட பிரிவுகளில் போதுமான அளவு நிபுணர்களை பணியமர்த்த வேண்டும் எனவும் சென்னையில் உள்ள தமிழ் கல்வெட்டியல் பிரிவிற்கு தேவையான அனைத்து வசதிகளையும் தமிழக அரசு 6 மாதத்திற்குள்ளாக செய்து தர வேண்டும் எனவும் நீதிபதிகள் உத்தரவிட்டிருந்தனர் என்பதும் குறிப்பிடத்தக்கதாகும்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

PMK manifesto 2011 about heritage dept


கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?



Advertisement

கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?




Seithipunal
--> -->