கள்ளச்சாராய விவகாரத்தில் அதிரடி காட்டும் பாமக! சிபிஐ விசாரிக்க உத்தரவிட கோரி அளிக்கப்பட்ட மனு இன்று விசாரணை!
pmk petition seeking order for CBI to investigate the fake liquor incident
சென்னை : கள்ளக்குறிச்சி மாவட்டம் கருணாபுரம் கள்ளச்சாராய சம்பவம் தொடர்பாக சிபிஐ அல்லது சிறப்பு புலனாய்வுக்கு விசாரிக்க உத்தரவிட கோரி பாமக சார்பில் உயர்நீதிமன்றத்தில் மனு அளிக்கப்பட்டுள்ளது.
கள்ளக்குறிச்சி மாவட்டம் கர்ணாபுரம் பகுதியில் அதிக மெத்தனால் கலக்கப்பட்ட கலாச்சாராயம் பிடித்து உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. கள்ளச்சாராயம் குடித்து உயிர் இழந்தவர்களின் எண்ணிக்கை 60 தாண்டி உள்ள நிலையில் நாடு முழுவதும் கள்ளச்சாராய விவகாரம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இந்த நிலையில் பாமக சார்பில் கள்ளக்குறிச்சி கருணாபுரம் கள்ளச்சாராய சம்பவம் தொடர்பாக சிபிஐ அல்லது சிறப்பு புலனாய்வு குழு விசாரிக்க உத்தரவிடக்கோரி பாமக சார்பில் மனு அளிக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே அதிமுக சார்பில் கள்ளச்சாராய சம்பவம் தொடர்பாக சிபிஐ விசாரிக்க உத்தரவிடக்கோரி மனு அளிக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் நீதிமன்றம் அமைந்திருக்கும் பகுதியிலே கள்ளச்சாராயம் காய்ச்சப்பட்டு விற்பனை செய்யப்பட்டுள்ளதாக பாமக சார்பில் அக்கட்சியின் வழக்கறிஞர் பாலு தாக்கல் செய்த மனு உயர்நீதிமன்ற பொறுப்பு தலைமை நீதிபதி அமர்வில் இன்று விசாரணைக்கு வருகிறது.
English Summary
pmk petition seeking order for CBI to investigate the fake liquor incident