கள்ளச்சாராய விவகாரம் : சிறப்பு புலனாய்வுக்கு விசாரிக்க உத்தரவிட கோரி பாமக தொடர்ந்த மனு! மீண்டும் நாளை விசாரணை! - Seithipunal
Seithipunal


சென்னை : கள்ளச்சாராய சம்பவம் தொடர்பாக சிபிஐ அல்லது சிறப்பு புலனாய்வுக்கு விசாரிக்க உத்தரவிட கோரி பாமக சார்பில் தாக்கல் செய்யப்பட்ட மனு விசாரணையை நாளை ஒத்திவைக்கபட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

கள்ளக்குறிச்சி மாவட்டம் கருணாபுரம் பகுதியில் அதிக மெத்தனால் கலக்கப்பட்ட கலாச்சாராயம் பிடித்து உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. கள்ளச்சாராயம் குடித்து உயிர் இழந்தவர்களின் எண்ணிக்கை 60 தாண்டி உள்ள நிலையில் நாடு முழுவதும் கள்ளச்சாராய விவகாரம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் நீதிமன்றம் அமைந்திருக்கும் பகுதியிலே கள்ளச்சாராயம் காய்ச்சப்பட்டு விற்பனை செய்யப்பட்டுள்ளதாக பாமக சார்பில் அக்கட்சியின் வழக்கறிஞர் பாலு தாக்கல் செய்த மனு உயர் நீதிமன்ற பொறுப்பு தலைமை நீதிபதி அமர்வில் இன்று விசாரணை வந்தது.

பாமக வழக்கறிஞர் பாலு நீதிபதிகளிடம் வாதிட்டதாவது, கள்ளக்குறிச்சியில்  நீதிமன்றம் அமைந்துள்ள பகுதியில் விற்கப்பட்ட கள்ளசாராயத்தை குடித்து ஒரே தெருவை சேர்ந்த 30க்கும் மேற்பட்டவர்கள் உரிழந்துள்ளனர். இதனை நீதிபதிகள் நேரில் சென்று ஆய்வு வேண்டும் என்று தெரிவித்தார்.

நீதிபதிகள் தெரிவித்தாவது, ஏற்கனவே இதேபோன்ற மனு விசாரிக்கப்பட்டு நாளை விசாரணைக்கு வருகிறது. அந்த மனுவுடன் சேர்த்து இந்த மனுவையும் விசாரணை செய்யப்படும். நாளை தமிழக அரசு தரப்பில் இருந்து இந்த சம்பவம் தொடர்பாக அறிக்கை தாக்கல் செய்யப்படும் என்று தெரிவித்தனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

pmk petition to order a special investigation again tomorrow


கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?



Advertisement

கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?




Seithipunal
--> -->