விஷ சாராய வழக்கு: சிபிசிஐடி போலீசாரின் அடுத்தகட்ட பிளான்.!  - Seithipunal
Seithipunal


கள்ளக்குறிச்சி, கருணாபுரம் பகுதியில் கடந்த 18 மற்றும் 19ஆம் தேதி களில் கள்ளச்சாராயம் குடித்து 64 பேர் உயிரிழந்துள்ளனர். 150 க்கும் மேற்பட்டோர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். 

கள்ளச்சாராயம் குடித்து தீவிர சிகிச்சை பெற்று வருபவர்களை அரசியல் தலைவர்கள் பலரும் நேரில் சென்று பார்வையிட்டு ஆறுதல் தெரிவித்தனர்.இந்த சம்பவம் தமிழ்நாட்டை பெரும் அதிர்ச்சிக்குள்ளாக்கியது. 

இந்த உயிரிழப்பு தொடர்பாக சிபிசிஐடி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினர் விசாரணையில் மெத்தனால் கலந்த கள்ளச்சாராயம் விற்பனை செய்யப்பட்டது தெரியவந்தது. 

இதனை தொடர்ந்து மெத்தனால் கலந்த கள்ளச்சாராயம் விற்றது தொடர்பாக கருணாகுரத்தைச் சேர்ந்த கன்னுக்குட்டி என்கின்ற கோவிந்தராஜ், அவரது மனைவி விஜயா, தம்பி தாமோதரன், சின்னதுரை ,கதிரவன், கண்ணன் உள்பட 21 பேரை போலீசார் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி கடலூர் மத்திய சிறையில் அடைத்துள்ளனர். 

இந்நிலையில் மெத்தனால் எங்கிருந்து விநியோகம் செய்யப்பட்டது யாருக்கெல்லாம் வினியோகம் செய்யப்பட்டது போன்ற விவரங்களை அறிந்து கொள்வதற்காக கைது செய்யப்பட்ட குற்றவாளிகளை காவலில் எடுத்து விசாரணை நடத்த சிபிசிஐடி போலீசார் முடிவு செய்துள்ளனர். 

அதன்படி கோவிந்தராஜ், விஜயா, சின்னதுரை, சிவக்குமார், கண்ணன், கதிரவன், சக்திவேல் உள்ளிட்ட 11 பேரை சிபிசிஐடி போலீசார் காவலில் எடுத்து விசாரணை நடத்துவதற்காக கள்ளக்குறிச்சி மாவட்ட தலைமை குற்றவியல் நீதிமன்றத்தில் இன்று மனு தாக்கல் செய்ய உள்ளனர்.
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

poisonous liquor case CBCID investigate issue


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->