ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கு! திடீர் திருப்பம்! சிக்கிய முக்கிய ஆதாரம்! காவல்துறை தீவிர தேடுதல் வேட்டை! - Seithipunal
Seithipunal


ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கு சம்பந்தமாக கூவத்தில் வீசப்பட்ட 6 செல்போன்களை போலீசார் தீவிரமாக தேடி வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.

கடந்த ஜூலை 5ஆம் தேதி  மர்ம நபர்களால் பகுஜன் சமாஜ் கட்சியின் மாநில தலைவர் ஆம்ஸ்ட்ராங் படுகொலை செய்யப்பட்டார். இந்த வழக்கு தொடர்பாக இதுவரை 14 பேரை காவல் துறையினர் கைது செய்துள்ளனர். அதில் குற்றவாளியான ரவுடி திருவேங்கடத்தை காவல்துறையினர் சமீபத்தில் என்கவுண்டர் செய்தனர்.

இந்த கொலை வழக்கு தொடர்பாக உதவியாக இருந்த கடம்பத்தூர் ஒன்றிய அதிமுக கவுன்சிலர் ஹரிகரன் என்பவரை நேற்று காவல்துறையினர் கைது செய்தனர். அதனையடுத்து அவர் உடனடியாக அதிமுகவின் அடிப்படை உறுப்பினர் பதவியில் இருந்து நீக்கப்பட்டார்.

ஹரிஹரன் மற்றும் அருள் ஆகியயோர்கள் கூறியபடி கொலை குற்றவாளிகள் பயன்படுத்திய 6 செல்போன்களை ஹரிகரன் வெங்களத்தூர் பகுதியில் உள்ள கூவத்தில்  வீசியது  விசாரணையில் தெரியவந்துள்ளது. இதனை அடுத்து நேற்று முதல் கூவத்தில் தீயணைப்பு வீரர்கள் தண்ணீரில் மூழ்கி தீவிரமாக செல்போனை தேடி வந்தனர். இந்த நிலையில் 3 செல்போன்கள் மட்டும் மீட்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

இரண்டாவது நாளாக, ஆற்றில் வீசப்பட்டு மற்ற மூன்று செல்போன்களை தேடும் பணியில் போலீசார் மற்றும் மெரினா மீட்பு குழுவினர், கியூபா பிரிவினருடன் இணைந்து தேடுதல் வேட்டையில் ஈடுபட்டு வருகின்றதாக தகவல் வெளியாகி உள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Police are actively searching for 6 cell phones thrown in the ditch in connection with Armstrong murder case


கருத்துக் கணிப்பு

தமிழகத்தின் கல்வித்தரம், கட்டமைப்பு வசதிகள் எப்படி இருக்கு?



Advertisement

கருத்துக் கணிப்பு

தமிழகத்தின் கல்வித்தரம், கட்டமைப்பு வசதிகள் எப்படி இருக்கு?




Seithipunal
--> -->