கோவை: சிறுமியை கடத்தி பலாத்காரம் செய்த வாலிபர்..! போலீசார் வலைவீச்சு...! - Seithipunal
Seithipunal


கோவை மாவட்டத்தில் சிறுமியை கடத்திச் சென்று பாலியல் பலாத்காரம் செய்த வாலிபரை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர்.

கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் பகுதியை சேர்ந்தவர் 16 வயது சிறுமி. இவருக்கும், அதே பகுதியை சேர்ந்த கூலித்தொழிலாளியான ராமசாமி(26) என்பவருக்கும் இடையே கடந்த சில வருடங்களுக்கு முன்பு பழக்கம் ஏற்பட்டுள்ளது. இந்த பழக்கம் நாளடைவில் காதலாக மாறியுள்ளது.

இதையடுத்து, ரங்கசாமி திருமணம் செய்து கொள்வதாக ஆசை வார்த்தைகள் கூறி சிறுமியை கடத்திச் சென்றுள்ளார். இதைத்தொடர்ந்து கோடயாபாளையத்துக்கு சிறுமியை அழைத்துச் சென்று திருமணம் செய்துள்ளார். பின்பு சிறுமியை ரங்கசாமி பாலியல் பலாத்காரம் செய்துள்ளார். இதனால் சிறுமி கர்ப்பமானார்.

இதற்கிடையே சிறுமியை காணவில்லை என்று பெற்றோர் மேட்டுப்பாளையம் காவல் நிலையத்தில் புகார் கொடுத்தனர். இந்த புகாரின் அடிப்படையில் வழக்கு பதிவு செய்த போலீசார் சிறுமியை தீவிரமாக தேடி வந்தனர். இந்நிலையில் சிறுமியை ரங்கசாமி கடத்திச் சென்று திருமணம் செய்து கோடயாபாளையத்தில் வசித்து வருவது தெரிய வந்தது.

இதைத்தொடர்ந்து சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார் சிறுமியை மீட்டு பெற்றோருடன் அனுப்பி வைத்தனர். மேலும் சிறுமியை கடத்திச் சென்று கர்ப்பமாக்கிய ரங்கசாமி மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்து, தலைமறைவாக உள்ள அவரை தீவிரமாக தேடி வருகின்றனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Police are looking for the youth who raped a girl in kovai


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->