கஞ்சா விற்பனை செய்த 2 முக்கிய புள்ளிகள்! 14 கிலோ கஞ்சா பறிமுதல்!
Police arrested 2 criminals who were selling ganja under the Gangster Prevention Act
கோவையில் 14 கிலோ கஞ்சாவை விற்பனைக்கு வைத்திருந்த 2 குற்றவாளிகள் மீது குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழ் காவல்துறை கைது செய்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
தமிழ்நாட்டில் நாளுக்கு நாள் போதை பொருட்கள் எண்ணிக்கையும் போதை பொருள் பயன்படுத்துவது எண்ணிக்கையும் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. சமீபத்தில் கள்ளக்குறிச்சியில் கள்ளச்சாராயம் குடித்து உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 65 ஆக உயர்ந்துள்ளது.
அதே சமயத்தில் தமிழ்நாடு முழுவதும் பல்வேறு பகுதிகளில் கஞ்சா விற்பனை நடைபெற்று வருகிறது. கஞ்சா விற்பனையில் ஈடுபடுபவர்களை அவ்வபோது காவல்துறை உரிய நடவடிக்கை எடுத்து கைது செய்து சிறையில் அடைத்து வருகிறது.
இந்தநிலையில், கருமத்தம்பட்டி பகுதியில் 14 கிலோ கஞ்சாவை விற்பனை செய்ய வைத்திருந்த தேனி மாவட்டத்தைச் சேர்ந்த செல்வம் மற்றும் இளையராஜா ஆகியோரைகருமத்தம்பட்டி போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர். அவர்கள் இருவரும் மீதும் குண்டர் தடுப்பு சட்டத்தின் நடவடிக்கை எடுக்கபட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
கிராந்திகுமார் உத்தரவின் பேரில், இருவர் மீதும் குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்து சிறையில் அடைக்கப்பட்டனர். இந்த ஆண்டில் இதுவரை 37 பேர் மீது குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது செய்யப்பட்டுள்ளார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
English Summary
Police arrested 2 criminals who were selling ganja under the Gangster Prevention Act