காரில் தொங்கிய மேயர் பிரியா மீது நடவடிக்கை வேண்டும்..!! சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார்..!! - Seithipunal
Seithipunal


மாண்டஸ் புயலால் ஏற்பட்ட பாதிப்புகளை சென்னை கொட்டிவாக்கம், பாலவாக்கம் பகுதிகளில் முதலமைச்ச மு.க ஸ்டாலின் கடந்த சனிக்கிழமை ஆய்வு மேற்கொண்டார். அதனைத் தொடர்ந்து காசிமேடு மீன்பிடித் துறைமுகத்திற்கு சென்ற சேதமடைந்த பதிவுகளை பார்வையிட்டார். அப்பொழுது ஸ்டாலின் உடன் அமைச்சர் கே.என் நேரு சேகர்பாபு, பாலசுப்பிரமணியன், சென்னை மேயர் பிரியா, சென்னை ஆணையர் ககன் தீப் சிங் பேடி உள்ளிட்டோர் சென்றிருந்தனர்.

அப்பொழுது முதலமைச்சரின் கான்வாயின் காரில் சென்னை மேயர் பிரியா, ஆணையர் ககன் தீப் சிங் மற்றும் சிலர் தொங்கியபடி சென்றனர். இது குறித்தான வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலானது. இந்த நிலையில் கான்வாயின் காரில் தொங்கியபடி சென்ற அனைவரும் மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என சென்னை கொருக்குப்பேட்டையைச் சேர்ந்த செல்வம் என்பவர் இணையத்தளம் வாயிலாக சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் அளித்துள்ளார்.

அந்த புகாரில் "மாண்டஸ் புயலால் பாதிக்கப்பட்ட சென்னை காசிமேடு மீன்பிடி துறைமுகம் பகுதியில் முதல்வர் ஸ்டாலின் கடந்த சனிக்கிழமை ஆய்வு மேற்கொண்டார். அப்பொழுது முதல்வரின் கால்வாயின் காரில் சென்னை மேயர் பிரியா, மாநகராட்சி ஆணையர் ககன் தீப் சிங் பேடி, மாநகராட்சி நிலை குழு தலைவர் இளைய அருணா ஆகியோர் தொங்கியபடி பயணம் செய்தனர். இது தொடர்பான வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலானது.

கண்ணியமிக்க அரசு துறைகளில் இருப்பவர்கள் சட்டத்தை மீறி ஆபத்தை உணராமல் சாலை வீதிகளை பின்பற்றாமல் காரில் தொங்கியபடி சென்று உள்ளனர். எனவே மோட்டார் வாகன சட்ட விதிகளை மீறி செயல்பட்டுள்ள சென்னை மேயர் பிரியா உள்ளிட்டோர் மீது தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும்" என புகார் அளித்துள்ளார். 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

police complaint against Mayor Priya hanging from the car


கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?



Advertisement

கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?




Seithipunal
--> -->