ஐஎஸ்ஐஎஸ் கொடியின் வடிவம்! ஹதீஸ் மற்றும் ஜிகாத் பற்றி குறிப்புகள்! வெளியான அதிர்ச்சி தகவல்! - Seithipunal
Seithipunal


கோவை உக்கடம் சங்கமேஸ்வரர் கோயில் அருகே கார் தற்கொலைப்படை தாக்குதல் சம்பவத்தில் தற்பொழுது புதிய தகவல்கள் வெளியாகி வருகின்றன. தற்பொழுது இந்த வழக்கினை தேசிய புலனாய்வு அமைப்பிடம் முழுமையாக ஒப்படைக்கப்பட்டுள்ளது. இவர்களுக்கு உதவியாக ஆறு பேர் கொண்ட கோவை மாநகர் போலீசார் விசாரணையில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த நிலையில் நேற்று கோவையில் மூன்று இடங்களில் போலீசார் அதிரடி சோதனை மேற்கொண்டனர்.

இந்த சோதனையில் கார் குண்டுவெடிப்பில் உயிரிழந்த ஜமேஷா முபின் வீட்டில் கைப்பற்றப்பட்ட சில ஆவணங்களில் ஹதீஸ் குறித்தும் ஜிகாத் குறித்தும் குறிப்புகள் எழுதப்பட்டுள்ளன. அதில் யாருக்கெல்லாம் ஜிகாத் கடமை உண்டு, யாருக்கெல்லாம் கடமை இல்லை என்பது குறித்து குறிப்புகள் எழுதப்பட்டுள்ளது. அல்லாவின் இல்லத்தின் மீது கை வைத்தால் வேரறுப்போம் என்ற வாசகம் எழுதப்பட்ட கரும்பலகையும் கைப்பற்றப்பட்டுள்ளது.

மேலும் அவர் வீட்டில் இருந்து கைப்பற்றப்பட்ட கரும்பலகையில் ஐஎஸ்ஐஎஸ் கொடிவறைந்து அதற்கு ஆதரவான வாக்கியங்கள் அரபு மொழியில் எழுதப்பட்டுள்ளது. 

இந்த நிலையில் அரபுச் சொற்களின் உண்மையான விளக்கம் குறித்து அறிய போலீசார் முயற்சி மேற்கொண்டு வருகின்றனர். கோவை கார் குண்டு வெடிப்பு சம்பவம் நிகழ்ந்ததிலிருந்து ஒவ்வொரு நாளும் புதுப்புது தகவல்கள் வெளியாகி வருகிறது. 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Police confiscation ISIS flag Notes on hades and Jihad


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->