கன்னியாகுமரி : வீட்டின் உள்ளே உயிரிழந்து கிடந்த பாதிரியார் - போலீசார் தீவிர விசாரணை.! - Seithipunal
Seithipunal


வீட்டின் உள்ளே உயிரிழந்து கிடந்த பாதிரியார் - போலீசார் தீவிர விசாரணை.!

கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள குளப்புரம் பகுதியைச் சேர்ந்தவர் ஆஸ்டின் ஜெனீஷ். இவர் அதேபகுதியில் உள்ள பெந்தேகோஸ்தே ஆலயத்தில் போதகராக இருந்து வருகிறார். திருமணம் ஆகாமல் வீட்டில் தனியாக வசித்து வரும் இவர் அருகிலுள்ள வீடுகளுக்கு தினமும் சென்று ஜெபம் செய்தும் வந்தார். 

இந்நிலையில் ஆஸ்டின் ஜெனீஷின் வீடு கடந்த இரண்டு நாட்களாகவே திறக்கப்படவில்லை. இதைப்பார்த்து சந்தேகமடைந்த அக்கம், பக்கத்தினர் போதகர் வீட்டில் ஜன்னல் வழியாக எட்டிப் பார்த்தனர். அப்போது, போதகர் வீட்டில் உயிரிழந்த நிலையில் கிடந்துள்ளார். 

அவரது சட்டையில் ரத்தக்கறை படிந்து இருந்தாலும் அவரது வீடு உள்பக்கமாக பூட்டி இருந்தது. இந்த சம்பவம் தொடர்பாக அப்பகுதிவாசிகள் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். அதன் படி, போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர்.  

அங்கு போலீசார் போதகர் ஆஸ்டின் ஜெனீஷ் உடலைக் கைப்பற்றி பிரேதப் பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர். பின்னர் போலீசார் இந்த சம்பவம் குறித்து தெரிவித்ததாவது, "பிரேத பரிசோதனைக்கு பிறகு தான் போதகர் ஆஸ்டின் ஜெனீஷ் மரணத்திற்கான காரணம் என்ன என்பது தெரியவரும்" என்று காவல்துறையினர் தெரிவித்தனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

police enquiry to father murder case in kanniyakumari


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->