செங்கல்பட்டு : மது குடித்த மாமியார், மருமகன் பிணமாக மீட்பு - நடந்தது என்ன? - Seithipunal
Seithipunal


செங்கல்பட்டு : மது குடித்த மாமியார், மருமகன் பிணமாக மீட்பு - நடந்தது என்ன?

செங்கல்பட்டு மாவட்டத்தில் உள்ள மதுராந்தகம் அருகே பெருக்கரணை கிராமத்தை சேர்ந்தவர் வசந்தா மகள் அஞ்சலை. இவருக்கும் சின்னத்தம்பி என்பவருக்கும் கடந்த சில மாதங்களுக்கு முன் திருமணம் நடைபெற்றது.

இதற்கிடையே வசந்தா, அவரது மகள் அஞ்சலை மற்றும் மருமகன் சின்னத்தம்பி என்று மூன்று பேருக்கும் மது குடிக்கும் பழக்கம் ஏற்பட்டுள்ளது. இந்த நிலையில் அவர்கள் நேற்று காலை நீண்ட நேரமாகியும் வீட்டைவிட்டு வெளியே வராததால் அக்கம்பக்கத்தினருக்கு சந்தேகம் ஏற்பட்டுள்ளது.

அதன் படி அவர்கள் வீட்டின் கதவை திறந்து பார்த்துள்ளனர். அப்போது வசந்தா மற்றும் அவரது மருமகன் சின்னத்தம்பி உள்ளிட்டோர் பிணமாக கிடந்தனர். அஞ்சலை மட்டும் சுய நினைவின்றி மயங்கிக் கிடந்துள்ளார். இதைப்பார்த்து அதிர்ச்சி அடைந்த அப்பகுதி மக்கள் சம்பவம் தொடர்பாக போலீசாருக்கு தகவல் அளித்துள்ளனர். 

அந்த தகவலின் படி போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து இறந்த இருவரது உடலை மீட்டு பிரேத பரிசோதனைக் காக செங்கல்பட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். கவலைக்கிடமாக இருந்த அஞ்சாலை செங்கல்பட்டு அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். 

அதன் பின்னர் போலீசார் சம்பவம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்து, தற்கொலைக்கான காரணங்கள் என்ன என்பது குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். ஒரே வீட்டில் மூன்று பேர் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

police enquiry to two peoples murder case in chengalpat


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->