தமிழகத்தில் மீண்டும் மன்னராட்சி கூடாது! வாரிசு அரசியலுக்கு முற்றுப்புள்ளி வைப்போம் - எடப்பாடி பழனிச்சாமி அறைகூவல்!
ADMK EPS DMK MK STalin Udhay
சேலம் மாவட்டம் ஆத்தூரில் நடைபெற்ற விழாவில், மாற்றுக் கட்சியினர் 2,025 பேர் அ.தி.மு.க.வில் இணைந்தனர். இதில் கலந்து கொண்ட அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி கே. பழனிசாமிக்கு நிர்வாகிகள் பாரம்பரியமாக வேல் வழங்கி வாழ்த்தினர்.
விழாவில் பேசிய எடப்பாடி பழனிசாமி, தி.மு.க. அரசை கடுமையாக விமர்சித்தார். "முதலமைச்சர் மு.க. ஸ்டாலின், தி.மு.க. கூட்டணி 200 தொகுதிகளில் வெற்றி பெறும் எனக் கூறியுள்ளார். ஆனால், உண்மையில் அது நிகழ முடியாது. இதற்கே இந்த கூட்டமே சரியான பதிலாக உள்ளது" என்று குறிப்பிட்டார்.
அவரது உரையில், "அ.தி.மு.க. மக்களிடையே செல்வாக்கு கொண்ட கட்சியாக வளர்ந்து வருகிறது. எம்.ஜி.ஆர், ஜெயலலிதா தமிழ்நாட்டு மக்களை தங்கள் குழந்தைகளாக நேசித்தனர். அவர்கள் மக்கள் நலனுக்காக வாழ்ந்த தலைவர்கள். 2026 சட்டமன்ற தேர்தல், வாரிசு அரசியலுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் தேர்தலாக அமைய வேண்டும்" என்றார்.
தற்போதைய அரசின் செயல்பாடுகளை விமர்சித்த அவர், "234 தொகுதிகளிலும் மக்கள் நல திட்டங்களை செயல்படுத்தியது அ.தி.மு.க. ஆட்சிதான். ஆனால், தி.மு.க. ஆட்சிக்கு வந்தவுடன், அவை அனைத்தும் நிறுத்தப்பட்டன. கால்நடை பூங்கா, குடிமராமத்து திட்டங்களை தி.மு.க. முடக்கியது. ஏழைகளுக்காக வழங்கப்பட்ட உதவித் தொகைக்கு கூட அரசியல் காழ்ப்புணர்ச்சியால் முட்டுக்கட்டை போடப்பட்டது" என்று குற்றஞ்சாட்டினார்.
மேலும், "அ.தி.மு.க. போராடிய பிறகே மகளிர் உரிமை தொகை வழங்கப்பட்டது" என்று தெரிவித்தார்.
English Summary
ADMK EPS DMK MK STalin Udhay