அனைத்து கட்சி கூட்டத்தில் பங்கேற்கும் விஜய் கட்சி! வெளியான முக்கிய அறிவிப்பு!
CM mk stalin All Party Meet Vijay TVK Party
தொகுதி மறுசீரமைப்பு விவகாரம் தொடர்பாக நாளை நடைபெற உள்ள அனைத்துக் கட்சி கூட்டத்தில் தமிழக வெற்றிக் கழகம் பங்கேற்க முடிவு செய்துள்ளது.
மக்கள் தொகை அடிப்படையில் பாராளுமன்றத் தொகுதிகளை மறுவரையறை செய்ய உள்ளதாக தகவல்கள் வெளியாகியவுடன், தமிழகத்தில் எம்.பி. தொகுதி எண்ணிக்கை குறையும் என்ற அச்சம் ஏற்பட்டது. இதற்கு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் கடும் எதிர்ப்பு தெரிவித்தார்.
தி.மு.க. கூட்டணி கட்சிகளும், எதிர்க்கட்சிகளும் இதை முற்றிலும் எதிர்த்தனர். ஆனால், கோவையில் நடைபெற்ற நிகழ்வில் மத்திய அமைச்சர் அமித் ஷா, "தொகுதிகள் குறையாது" என தெரிவித்தார்.
மத்திய அரசு இதற்கான தெளிவான விளக்கம் அளிக்க வேண்டும் என்பதால், தொகுதி மறுசீரமைப்பு விவகாரத்தில் விவாதிக்க நாளை (மார்ச் 5) அனைத்துக் கட்சி கூட்டம் நடைபெறும் என முதலமைச்சர் அறிவித்தார். இந்த கூட்டம் சென்னை தலைமை செயலகத்தில் உள்ள கூட்ட அரங்கில் நடைபெற உள்ளது.
இந்நிலையில், தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய், பொதுச் செயலாளர் புஸ்சி ஆனந்த், நிர்வாகிகள் ஆகியோர் ஆலோசனை நடத்தினர்.
பின்னர், மாநில நலன் கருதி, அணைத்து கட்சி கூட்டத்தில் பங்கேற்பதற்க விஜய் ஒப்புதல் அளித்ததால், தமிழக வெற்றிக் கழகத்தின் சார்பில் பொதுச் செயலாளர் புஸ்சி ஆனந்த் கலந்து கொள்ள உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
English Summary
CM mk stalin All Party Meet Vijay TVK Party