ஜமேஷா முபின் குறி வைத்த 5 இடங்கள்! டைரியை ஆய்வு செய்த போலீஸ்க்கு காத்திருந்த அதிர்ச்சி! - Seithipunal
Seithipunal


கோவை கார் வெடிப்பு சம்பவத்தில் உயிரிழந்த ஜமேஷா முபின் வீட்டில் தனிப்படை போலீசார் சோதனை நடத்தினர். இந்த சோதனையில் அவர் வீட்டில் இருந்து நாட்டு வெடி குண்டுகள் தயாரிக்க பயன்படுத்தப்படும் பொட்டாசியம் நைட்ரேட், அலுமினியம் பவுடர், சல்பர் உள்ளிட்ட வெடி மருந்துகள் 75 கிலோ மற்றும் வயர்கள் உள்ளிட்ட பொருட்களை போலீசார் கைப்பற்றினர். இந்த சோதனையின் போது ஜமேஷா முபின் எழுதிய டைரியும் போலீசாரால் கண்டுபிடிக்கப்பட்டது.

அந்த டைரியை ஆய்வு செய்த காவல்துறையினர் சந்தேகத்திற்குரிய குறியீடுகள் மற்றும் பல்வேறு இடங்கள் குறித்தான விவரங்கள் குறிப்பிடப்பட்டிருந்தது. சுற்றுலா தளங்கள் என்ற பெயரில் கோவை ரயில் நிலையம், மாவட்ட ஆட்சியர் அலுவலகம், மாநகராட்சி பிரதான அலுவலகம், மாநகர காவல் ஆணையர் அலுவலகம், போஸ்கோர்ஸ் ஆகிய பெயர்கள் எழுதப்பட்டிருந்தது போலீசாருக்கு அதிர்ச்சியை உண்டாக்கியது. மேற்கண்ட இடங்களுக்கு சுற்றுலா தளங்கள் அல்ல. அதில் மூன்று இடங்கள் முக்கிய அரசு அலுவலகங்கள்.

நான்காவதாக குறிப்பிட்டுள்ள கோவை ரயில் நிலையத்தில் தினமும் 60க்கும் மேற்பட்ட ரயில்கள் இயக்கப்பட்டு வருகின்றன தினமும் பல்லாயிரத்திற்கும் மேற்பட்ட பயணிகள் கோவை ரயில் நிலையத்துக்கு வந்து செல்கின்றனர். ஐந்தாவதாக குறிப்பிடப்பட்டுள்ள ரோஸ்கோர்ஸ் நடைபாதையில் மக்கள் தினமும் காலை முதல் இரவு வரை பல்லாயிரத்திற்கும் மேற்பட்டோர் நடை பயிற்சி மேற்கொண்டு வருகின்றனர். மேற்கண்ட ஐந்து இடங்களில் காரில் வெடி மருந்துகள் பதுக்கி மக்கள் கூடும் பொழுது வெடிக்கும் வகையில் ஏற்பாடு செய்ய சதி திட்டம் தீட்டி இருக்கலாம் என போலீசார் சந்தேகிக்கின்றனர். 

யாருக்கும் தன் மீது சந்தேகம் வராதபடி நடந்து கொண்ட ஜமேஷா முபின் ஐஎஸ்ஐஎஸ் தீவிரவாதிகளின் வழிகாட்டுதலின்படி யூடியூப் பார்த்து வெடிகுண்டு தயாரிக்கும் முறையை அவர் கற்றுள்ளார் என்பது சைபர் கிரைம் போலீசார் உதவியுடன் தனிப்படை போலீசார் கண்டறிந்துள்ளனர். மேலும் கைதான ஐந்து பேரின் செல்போனில் உள்ள அழிக்கப்பட்ட தகவல்களை மீட்டெடுக்கும் முயற்சியில் சைவர்களின் போலீசார் ஈடுபட்டு வருகின்றனர். 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Police examining Jamesha Mubine diary


கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?



Advertisement

கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?




Seithipunal
--> -->