ஜெய் பீம் விவகாரத்தில் புதிய திருப்பம்! நீதிமன்றத்தின் உத்தரவால் காவல்துறை அதிரடி நடவடிக்கை!  - Seithipunal
Seithipunal


ஜெய் பீம் படக் குழுவினர் மீது காப்புரிமை சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. கொளஞ்சியப்பன் என்பவர் சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் தொடர்ந்த வழக்கின் அடிப்படையில் இந்த நடவடிக்கையானது எடுக்கப்பட்டுள்ளது.

தங்களது வாழ்க்கை உண்மை சம்பவத்தை தங்களது அனுமதி இல்லாமல் திரைப்படமாக்கியதாக கூறி ராஜாக்கண்ணுவின் உறவினர் கொளஞ்சியப்பன் வழக்கு தொடர்ந்திருந்தார். இந்த வழக்கின் அடிப்படையில் வருகின்ற 26 ஆம் தேதிக்குள் வழக்கு பதிவு செய்து நடவடிக்கை எடுக்க காவல்துறையினருக்கு  நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. 

இந்த நிலையில் சென்னை சாஸ்திரி நகர் காவல்துறையினர் காப்புரிமை சட்டத்தின் படி வழக்கு பதிவு செய்து இருக்கின்றனர். இயக்குனர் ஞானவேல், தயாரிப்பாளர் சூர்யா, ஜோதிகா ஆகியோர் மீது இந்த வழக்கானது பதிவு செய்யப்பட்டுள்ளது. 

முன்னதாக ஜெய் பீம் படத்தின் கதைக்கு ஒரு கோடி தருவதாகவும், பட லாபத்தில் 20% தருவதாகவும் படக்குழு சார்பாக உறுதியளிக்கப்பட்டதாகவும் ஆனால் இதுவரை எந்தவிதமான தொகையும் அளிக்கப்படவில்லை என்றும் ராஜாக்கண்ணுவின் உறவினர் கொளஞ்சியப்பன் குற்றம் சாட்டி இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.  


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Police file case against jai bhim team


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->