விருதுநகர் அருகே 90 பவுன் நகை திருடு போன சம்பவத்தில் ஈடுபட்டது யார் தெரியுமா.? போலீசார் விசாரணையில் 'திடுக்' தகவல்..!! - Seithipunal
Seithipunal


நேற்று (ஜூலை 14) விருதுநகர் அருகே உள்ள ஆர். ஆர். நகரில் அருகருகே உள்ள இரண்டு வீடுகளின் பூட்டை உடைத்து சுமார் 90 பவுன் நகைகள் திருடு போனதாக தகவல் வெளியானது. அதன்படி ஆர். ஆர் நகரில் உள்ள தனியார் சிமெண்ட் ஆலையில் நிர்வாகத் துணைப் பொது மேலாளராக பணியாற்றி வரும் பாலமுருகன் (41) என்பவரது வீட்டின் பூட்டு நேற்று உடைக்கப் பட்டிருந்தது. 

கடந்த இரு தினங்களுக்கு முன்பு தான் பாலமுருகன் தனது தந்தையைப் பார்ப்பதற்காக திருநெல்வேலி சென்றது குறிப்பிடத்தக்கது. மேலும் பாலமுருகனின் வீட்டிற்கு அருகே வசித்து வரும் ராமசந்திரன் என்பவரது வீட்டின் பூட்டும் உடைக்கப் பட்டிருந்தது. ராமச்சந்திரனும் அதே தனியார் ஆலையில் தொழில்நுட்ப துணைப் பொது மேலாளராகப் பணியாற்றி வருவது குறிப்பிடத்தக்கது. 

இந்நிலையில் இவ்விருவரது வீட்டில் இருந்தும் சுமார் 100 பவுன் நகைகள் திருடு போனதாக முதலில் கூறப்பட்டது. ஆனால் பின்னர் பாலமுருகன் வீட்டில் மட்டும் 90 பவுன் திருடு போனதாகவும், ராமசந்திரன் வீட்டில் எதுவும் திருடு போகவில்லை என்றும் தெரிய வந்ததையடுத்து, வச்சக்காரப்பட்டி போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தினர். 

இதையடுத்து அங்குள்ள சிசிடிவி கேமராக்களை ஆய்வு செய்த போது, இந்த திருட்டில் 4 பேர் ஈடுபட்டுள்ளதும், அவர்கள் அனைவரும் மத்தியபிரதேசத்தைச் சேர்ந்தவர்கள் என்றும் தெரிய வந்துள்ளது. இதில் முன்னரே ஒரு திருட்டு வழக்கில் கைதாகி வெளியே வந்த சஞ்சய் என்பவரை போலீசார் அடையாளம் கண்டுள்ளனர். இதையடுத்து 4 போரையும் போலீசார் தேடி வருகின்றனர். 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Police Find Out Who Were Involved in 90 Sovereigns Theft Near virudhunagar


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->