சென்னையில் பிரபல ரவுடி சுட்டு பிடிப்பு.!
police gun shoot to popular rowdy high court maharaja
தூத்துக்குடியை சேர்ந்தவர் பிரபல ரவுடி ஐகோர்ட்டு மகாராஜா. இவர் மீது பல்வேறு குற்ற வழக்குகள் நிலுவையில் உள்ளன.
கடந்த சில நாட்களுக்கு முன்பு சென்னை ஆதம்பாக்கத்தில் போலீசார் நடத்திய சோதனையில் தூத்துக்குடியை சேர்ந்த சில ரவுகள் கைது செய்யப்பட்டனர். அவர்களிடம் நடத்தப்பட்ட விசாரணையில் பிரபல ரவுடி ஐகோர்ட்டு மகாராஜாவும் சென்னையில் பதுங்கி இருப்பது தெரியவந்தது.

இந்த நிலையில், சென்னை கிண்டியில் பதுங்கி இருந்த ரவுடி ஐகோர்ட்டு மகாராஜாவை இன்று போலீசார் துப்பாக்கியால் சுட்டு பிடித்துள்ளனர். இது தொடர்பாக நடத்திய விசாரணையில், ஆதம்பாக்கத்தில் உள்ள நகைக்கடை உரிமையாளரை கொலை செய்யும் நோக்கத்தோடும் தூத்துக்குடி ரவுடி கும்பல் சென்னைக்கு வந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
துப்பாக்கியால் சுட்டு பிடிக்கப்பட்ட ரவுடி ஐகோர்ட்டு மகாராஜா மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டுள்ளார். உடல் நிலை சரியானதும் அவரிடம் விசாரணை நடத்தப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
English Summary
police gun shoot to popular rowdy high court maharaja