எத்தனால், ஆல்கஹால் பயன்படுத்தும் தொழிற்சாலைகளில் போலீசார் திடீர் ஆய்வு! பின்னணி என்ன? - Seithipunal
Seithipunal


கிருஷ்ணகிரி, ஓசூர் முதலாவது சிப்காட் பகுதியில் ஏராளமான தொழிற்சாலைகள் இயங்கி வருகிறது. இங்கு மருந்து, மாத்திரை தயாரிக்கும் தொழிற்சாலைகளும் செயல்படுகிறது. 

இந்நிலையில் தங்கள் தயாரிப்புக்கு எத்தனால் மற்றும் ஆல்கஹால் பயன்படும் இரண்டு மருந்து, மாத்திரை தயாரிக்கும் தொழிற்சாலைகள் மற்றும் பூனம்பள்ளி அருகே செயல்படும் ஒரு தொழிற்சாலை என மொத்தம் 3 தொழிற்சாலைகளில் போலீசார் சோதனை மேற்கொண்டனர். 

இந்த சோதனையில் ஓசூர் சிப்காட் போலீஸ் இன்ஸ்பெக்டர் பிரகாஷ் தலைமையிலான குழு ஈடுபட்டிருந்தது. அப்போது எத்தனால் மற்றும் ஆல்கஹால் இருப்பு சரியாக உள்ளதா எனவும் பாதுகாப்பாக வைக்கப்பட்டுள்ளதா அவற்றின் காலக்கெடு பாதுகாப்பு தன்மை போன்றவற்றை குறித்தும் போலீசார் சோதனையில் ஈடுபட்டனர். 

விக்கிரவாண்டி, கருணாகபுரம் பகுதியில் கள்ளசாராயம் குடித்து உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை 42 ஆக உயர்ந்துள்ளதை அடுத்து ஆல்கஹால், எத்தனால் பயன்படுத்தும் தொழிற்சாலைகளில் போலீசார் சோதனை நடத்தியிருக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.


 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

police inspect ethanol alcohol factories


கருத்துக் கணிப்பு

சென்னையில் ஃபார்முலா கார் ரேஸ் தேவைதானா?



Advertisement

கருத்துக் கணிப்பு

சென்னையில் ஃபார்முலா கார் ரேஸ் தேவைதானா?




Seithipunal
--> -->