ரத்தவெள்ளத்தில் கிடந்த இளைஞர்.. கொலை செய்யப்பட்டாரா என காவல்துறை விசாரணை.. திருவள்ளூர் அருகே பரபரப்பு..! - Seithipunal
Seithipunal


இளைஞர் சடலமாக கண்டெடுக்கப்பட்ட சம்பவம் குறித்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

திருவள்ளூர் மாவட்டம், புங்கத்தூர் பகுதியை சேர்ந்த பூவரசன் ( வயது 24). இவருக்கு திருமணமாகி மனைவி மற்றும் குழந்தை உள்ளது. இவர் அந்த பகுதியில் உள்ள தனியார் கம்பெனியில் வெல்டராக வேலை பார்த்து வந்துள்ளார். 

இந்நிலையில் அவர் மைத்துனர் வீட்டு நிகழ்ச்சிக்கு சென்று விட்டு வீடு திரும்பியுள்ளார். இதனை அடுத்து நேற்று இரவு 8 மணி அளவில் திருவள்ளூர் மற்றும் ஊத்துக்கோட்டை சாலையில் ரத்த வெள்ளத்தில் இளைஞர் ஒருவர் இறந்து கிடப்பதாக காவல்துறைக்கு தகவல் கிடைத்தது.

இதனையடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்த காவல்துறையினர் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். விசாரணையில் அது பூவரசனின் உடல் என்பது தெரியவந்தது. மேலும், பூவரசன் ஓட்டி வந்த இருசக்கரா வாகனம் நிறுத்திவைக்கப்பட்டிருந்ததாஅல் அவர் கொலை செய்யப்பட்டாரா அல்லது விபத்தில் உயிரிழந்தாரா என்ற கோணத்தில் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

இளைஞர் மர்மமான முறையில் உயிரிழந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த சம்பவம் குறித்து வழக்குபதிவு செய்தகாவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Police investigation about youth Death Near thiruvallur


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->