சேலம் அருகே பரபரப்பு.! ஏரியில் தனியார் வங்கி ஊழியர் மர்ம மரணம்..! போலீசார் தீவிர விசாரணை
Police investigation for private bank employee who died mysteriously in the lake in salem
சேலம் மாவட்டத்தில் ஏரி கரையில் தனியார் வங்கி ஊழியர் மர்மமான முறையில் உயிரிழந்து கிடந்த சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
சேலம் மாவட்டம் ஆத்தூர் அருகே நடுவலூர் பகுதியை சேர்ந்தவர் செந்தில். இவரது மகன் சுரேஷ் (20). இவர் தனியார் வங்கியில் ஊழியராக வேலை பார்த்து வந்தார். இந்நிலையில் சுரேஷ் ஆத்தூரில் இருந்து மஞ்சினி பகுதிக்கு செல்லும் வழியில் துலக்கனூர் ஏரிக்கரையில் மர்மமான முறையில் இறந்து கிடந்துள்ளார். மேலும் அவரது அருகே ரத்த கறைகள் இருந்துள்ளது.
இதைப் பார்த்து அதிர்ச்சி அடைந்த அவ்வழியாக சென்றவர்கள் இது குறித்து காவல்துறையினருக்கு தகவல் தெரிவித்துள்ளனர். இந்த தகவலையடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த ஆத்தூர் டவுன் போலீசார், சம்பவ இடத்தை பார்வையிட்டனர்.
இதைத்தொடர்ந்து போலீசார் சுரேஷின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இந்த சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்த போலீசார், சுரேஷ் மர்மமான முறையில் உயிரிழந்து கிடந்தது குறித்து பல்வேறு கோணங்களில் தீவிரமாக விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
English Summary
Police investigation for private bank employee who died mysteriously in the lake in salem