தனுஷ்கோடியில் ஒதுங்கிய இலங்கை படகு.! தீவிர விசாரணையில் போலீசார்.!
police investigation for srilangan boat standed in dhanushkodi
ராமநாதபுரம் மாவட்டம் ராமேசுவரம் அருகே தனுஷ்கோடி வடக்கு கடற்கரை பகுதியில் பிளாஸ்டிக் படகு ஒன்று கரை ஒதுங்கி கிடப்பதாக மீனவர்கள் போலீசாருக்கு தகவல் அளித்தனர்.
அந்த தகவலின் படி, தனிப்பிரிவு கடலோர போலீசார் மற்றும் சுங்கத்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று, படகை சோதனை செய்தனர். அப்போது அந்த படகில் 9.9 குதிரை திறன் கொண்ட என்ஜின், சுமார் 20 லிட்டர் மண்ணெண்ணெய், மீன்பிடி வலை மற்றும் மீன்களுக்கான பெட்டி உள்ளிட்ட பல பொருட்கள் கண்டுபிடிக்கப்பட்டது.
அதன், முன்பகுதியில் ஓ.எப்.ஆர்.பி.-ஏ-7069 சி.எச்.டபிள்யூ. என்ற பதிவெண் எழுதப்பட்டுள்ளது. இந்த நிலையில், போலீசார் அந்த எண்ணை வைத்து விசாரணை செய்ததில் இந்த படகு இலங்கை யாழ்ப்பாணம் அனலை தீவு பகுதியை சேர்ந்தது என்று தெரியவந்தது.
இதையடுத்து, போலீசார் இந்த படகு இந்த இடத்திற்கு எப்படி வந்தது? கடல் அலையால் அடித்து வரப்பட்டதா? யாராவது எடுத்து வந்தனரா? என்று பல்வேறு கோணங்களில் தீவிரமாக விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
English Summary
police investigation for srilangan boat standed in dhanushkodi