கொடைக்கானலில் பரபரப்பு || விஷம் குடித்து இளம்பெண் தற்கொலை - கள்ளகாதலனுக்கு போலீசார் வலைவீச்சு.! - Seithipunal
Seithipunal


மதுரை மாவட்டத்தில் உள்ள மேலக்கள்ளந்திரி பகுதியைச் சேர்ந்தவர் சசிகுமார். திருமணமான iவருக்கும் அவரது உறவினர் மகாலெட்சுமி என்பவருக்கும் நீண்ட நாட்களாக பழக்கம் ஏற்பட்டு நாளடைவில் கள்ளக்காதலாக மாறியது. இதனால் வெளிநாட்டில் வேலை பார்த்து வந்த சசிகுமார் காதல் மோகத்தால் நாடு திரும்பினார்.

இதையடுத்து இவர்கள் இருவரும் அடிக்கடி வீட்டுக்கு தெரியாமல் வெளியே சுற்றுலா சென்று வந்துள்ளனர். இந்த நிலையில் மகாலெட்சுமி தனது கணவரிடம் நகை கடைக்கு செல்வதாக கூறிவிட்டுச் சென்றுள்ளார். ஆனால் நீண்ட நேரமாகியும் வீடு திரும்பாததால் அதிர்ச்சியடைந்த அவர் மகாலெட்சுமியை தேடி வந்துள்ளார்.

இதற்கிடையே மகாலெட்சுமி தனது குடும்பத்தினரை செல்போன் மூலம் தொடர்பு கொண்டு கொடைக்கானலில், மிகுந்த மன உளைச்சலில் இருப்பதாகவும், தற்கொலை செய்து கொள்ளப்போவதாகவும் தெரிவித்துள்ளார். இதனால் அதிர்ச்சியடைந்த குடும்பத்தினர் விரைந்து சென்றனர். 

ஆனால், அதற்குள் சசிகுமார் மற்றும் மகாலட்சுமி தற்கொலை செய்ய முடிவு செய்துள்ளனர். அதில், மகாலட்சுமி மட்டும் மருந்து குடித்து உயிரிழந்துள்ளார். சசிகுமார் மருந்தைக் குடிக்காமல் தூக்கி வீசிவிட்டு அங்கிருந்து தப்பித்துச் சென்றுள்ளார். இந்த நிலையில், நீண்ட நேரமாகியும் கதவு திறக்காததால் சந்தேகமடைந்த விடுதி ஊழியர்கள் சம்பவம் குறித்து போலீஸாருக்குத் தகவல் அளித்தனர். 

அதன் படி போலீசார் விரைந்து வந்து பார்த்தபோது மகாலெட்சுமி உயிரிழந்த நிலையில் கிடந்துள்ளார். உடனே போலீசார் அவரது உடலை கைப்பற்றி மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். மேலும் சம்பவம் தொடர்பாக வழக்கு பதிவு செய்து தப்பி ஓடிய கள்ளக்காதலன் சசிகுமாரை தீவிரமாகத் தேடி வருகின்றனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

police invstigation women sucide case in kodaikanal


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->