கோயம்புத்தூரில் பரபரப்பு - பயங்கரவாத தடுப்பு பிரிவு எஸ்எஸ்ஐ தற்கொலை.!
police officer sucide in coimbatore
கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள வ. உ.சி மைதானத்தில் உள்ள புங்கை மரம் ஒன்றில் சிறப்பு உதவி ஆய்வாளராக பணிபுரிந்து வந்த சொக்கலிங்கம் என்பவர் நேற்றிரவு சேலையில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.
இதனை அப்பகுதியில் ரோந்து பணியிலிருந்த காவலர்கள் பார்த்துள்ளனர். உடனே அவர்கள் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
தற்கொலை செய்துகொண்ட சொக்கலிங்கம் 1997 ஆண்டு காவல்துறையில் சேர்ந்துள்ளார். கடந்த 2024 ஆம் ஆண்டில் இருந்து பயங்கரவாத தடுப்பு பிரிவு சிறப்பு உதவி ஆய்வாளராக பணிபுரிந்து வருகிறார்.
பயங்கரவாத தடுப்பு பிரிவு சிறப்பு உதவி ஆய்வாளராக பணிபுரிந்து வந்த போலீசார் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
English Summary
police officer sucide in coimbatore