திமுக அரசுக்கு எதிராக கருத்து - போலீஸ் ஏட்டு சஸ்பெண்ட்.! - Seithipunal
Seithipunal


சென்னை அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் மாணவி ஒருவர் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவம் மக்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த சம்பவத்தில் திமுக அரசுக்கு எதிராக பல்வேறு போராட்டங்களில் எதிர்க்கட்சியினர் ஈடுபட்டு வருகின்றனர். 

அதுமட்டுமல்லாமல், ஏராளமானோர் சட்டம்-ஒழுங்கு பாதிப்பு தொடர்பாக சமூக வலைதளங்களில் திமுக அரசுக்கு எதிரான கடுமையான கருத்துக்களைப் பதிவிட்டு வருகின்றனர். இந்த நிலையில், வேலூர் தாலுகா காவல் நிலையத்தில் ஏட்டாக பணியாற்றி வரும் அன்பரசன் என்பவர் தனது முகநூல் பக்கத்தில் அண்ணா பல்கலைக்கழக விவகாரம் குறித்து திமுக அரசுக்கு எதிராகக் கருத்து பதிவு ஒன்றுக்கு ஆதரவு தெரிவிக்கும் வகையில் கருத்து பகுதியில் தனது கருத்தைப் பதிவிட்டுள்ளார்.

இந்த சம்பவம் தொடர்பாக அளிக்கப்பட்ட புகாரின் பேரில் மாவட்ட போலீஸ் அதிகாரிகள் நேற்று முன்தினம் விசாரணை மேற்கொண்டனர். அதன் முடிவில், அன்பரசனை பணியிடை நீக்கம் செய்து போலீஸ் சூப்பிரண்டு மதிவாணன் உத்தரவிட்டுள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

police officer suspend for post against dmk government


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->