கைதிகளை காவல்துறையினர் துன்புறுத்தக் கூடாது - கோவை வழக்கறிஞர் சங்கம் எச்சரிக்கை.!!
police officers not torture to accuest
கைதிகளை காவல்துறையினர் துன்புறுத்தக் கூடாது - கோவை வழக்கறிஞர் சங்கம் எச்சரிக்கை.!!
கோயம்புத்தூர் நீதிமன்ற வளாகத்தில் கோவை வழக்கறிஞர் சங்கம் சார்பில் சித்ரவதையால் பாதிக்கப்பட்டவர்களுக்கான சர்வதேச தின சிறப்பு நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த நிகழ்ச்சிக்கு வழக்கறிஞர் சங்க தலைவர் கே.எம்.தண்டபாணி தலைமை தாங்கிய நிலையில், மனித உரிமை பிரிவு தலைவர் சுந்தரவடிவேல் முன்னிலை வகித்தார்.
இந்த விழாவில் கோவை மாவட்ட முதன்மை நீதிபதி எம்.என்.செந்தில்குமார் கலந்து கொண்டு சித்ரவதையில் பாதிக்கப்பட்டடோருக்னான சட்ட விழிப்புணர்வு புத்தகத்தை வெளியிட்டு பேசினார். அப்போது அவர் தெரிவித்ததாவது:- "ஐ.நா. சபையின் ஒப்புதலை பெற்று சர்வதேச சித்ரவதை தடுப்பு சட்டம் கொண்டு வரப்பட்டுள்ளது.
ஆனால், இந்த சட்டத்தை அனைத்து நாடுகளும் பின்பற்ற வேண்டும் என்பதுதான் சவாலாக உள்ளது. வழக்குகள் தொடர்புடைய எந்த ஒரு நபரையும் போலீசார் சித்ரவதை செய்து ஒப்புதல் வாக்குமூலம் பெற கூடாது.
அதேபோல், திருட்டுபோன பொருட்களை மீட்பதற்காக அந்த நபர் துன்புறுத்தப்பட்டால், அவ்வாறு துன்புறுத்தும் நபர் காவல்துறையை சேர்ந்தவர்களாக இருந்தாலும் அவர்களுக்கு பத்து ஆண்டுகள் கடுங்காவல் தண்டனை வழங்க சட்டத்தில் இடம் உள்ளது.
கைதிகளை துன்புறுத்திதான் விசாரணை செய்ய வேண்டும் என்பது பழங்கதையாகிவிட்டது. சட்ட விதிமுறைகளுக்கு உட்பட்டு மட்டுமே காவல்துறையினர் விசாரணை செய்ய வேண்டும். இந்த விதிமுறைகளை மீறினால் அது எந்த வகையிலும் பயன் தராது.
துன்புறுத்தி விசாரணை செய்யும் முறைகளை தடுக்கும் நோக்கத்தோடு காவல்துறை உயர் அதிகாரிகளுக்கு வழிகாட்டும் நெறிமுறைகளை உருவாக்கப்பட்டுள்ளது. அவற்றை அனைத்து காவல்துறை அதிகாரிகளும் பின்பற்ற வேண்டும்" என்று அவர் தெரிவித்தார்.
English Summary
police officers not torture to accuest