அமோனியா வாயு கசிவு || போராட்டம் 18 பேர் மீது போலீசார் வழக்கு பதிவு.!! - Seithipunal
Seithipunal


சென்னை எண்ணுாரில் கோரமண்டல் உர தொழிற்சாலையில் இருந்து அமோனியா வாயு கசிந்ததை கண்டித்து அனுமதி பெறாமல் போராட்டம் நடத்தியவர்கள் உள்ளிட்ட 18 பேர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்திருப்பது பொதுமக்கள் மத்தியில் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது. கோரமண்டல் இன்டர் நேஷனல் பிரைவேட் லிமிடெட் உரத் தொழிற்சாலையின் இறக்குமதி குழாயில் உடைப்பு ஏற்பட்டு அமோனியா வாயு கசிந்ததால் பெரியகுப்பம், சின்னகுப்பம் உட்பட 30க்கும் மேற்பட்ட கிராமத்தினர் மூச்சுத்திணறல், வாந்தி, மயக்கம், கண் எரிச்சல் உள்ளிட்ட உடல்  உபாதைகளால் பாதிக்கப்பட்டனர்.

அவ்வாறு பாதிக்கப்பட்ட 50க்கும் மேற்பட்டோர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். அமோனியா கசிவிற்கு காரணமான கோரமண்டல் நிறுவனத்தை நிரந்தரமாக மூடக்கோரி மீனவ கிராம மக்கள் அந்நிறுவனத்தின் இரு வாயில்களையும் முற்றுகையிட்டு கடந்த டிசம்பர் 27ம்தேதி காலை போராட்டம் நடத்தினர். அதனைத்தொடர்ந்து அந்நிறுவனம் தற்காலிகமாக மூடப்படும் என மாசு கட்டுப்பாட்டு வாரியம்  நோட்டீஸ் ஒட்டியது. அதையடுத்து சில கிராமங்களில் போராட்டம் தற்காலிகமாக வாபஸ் பெறப்பட்டன.

இந்நிலையில் அனுமதி பெறாமல் போராட்டம் நடத்தியதாக தாழங்குப்பத்தைச் சேர்ந்த 16 பேர் மீது எண்ணூர் காவல் துறையினர் நேற்று வழக்கு பதிவு செய்துள்ளனர். அதேபோன்று போராட்டத்திற்கு பந்தல் மற்றும் ஒலிபெருக்கி அமைத்து கொடுத்த கணேஷ், சுதாகர் ஆகிய இருவர் மீதும் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. கோரமண்டல் நிறுவனத்தின் பெரியகுப்பம் வாயில் பகுதியில் மீனவர் கிராமங்களைச் சேர்ந்த மக்கள் போராட்டம் நடத்தி வரும் நிலையில் போலீசாரின் நடவடிக்கை பொது மக்கள் மத்தியில் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

police registered a case against 18 protestors


கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?



Advertisement

கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?




Seithipunal
--> -->