லோடு வேனில் வைத்து கஞ்சா விற்பனை - போலீசார் காட்டிய அதிரடி.!
police seized drungs load auto in thoothukudi gandhipuram
லோடு வேனில் வைத்து கஞ்சா விற்பனை - போலீசார் காட்டிய அதிரடி.!
தமிழகத்தில் அதிலும் குறிப்பாக தென்மாவட்டங்களில் சிறுவர்கள் மற்றும் இளைஞர்களைக் குறிவைத்து கஞ்சா விற்பனை நடைபெற்று வருகின்றது. இந்த விற்பனையை தடுக்கும் விதமாக காவல்துறையினர், கஞ்சா விற்பனையாளர்கள் மீது குண்டர் சட்டம் பாய்ச்சுவது, அவர்களின் வங்கிக் கணக்குகளை முடக்குவது என்று தீவிர நடவடிக்கை எடுத்து வருகின்றது.
இருப்பினும் இந்த கஞ்சா விற்பனை இன்னும் குறையாமல் நடந்துகொண்டே வருகிறது. அந்த வகையில், தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள காந்திபுரம் பகுதியில் ஒரு தோட்டத்தில் லோடு வேன் அடிக்கடி வந்து நிற்பதும், அதில் இருக்கும் பார்சல்களை சிலர் இருசக்கரவாகனத்தில் வந்து பிரித்து எடுத்துச் செல்வதும் தொடர கதையாகி வந்தது.
இந்த சம்பவம் குறித்து போலீஸாருக்குத் தகவல் தெரிய வந்தது. அந்த தகவலின் படி அவர்கள் வருவாய்த்துறை அதிகாரிகளுடன் சென்று லோடு வேனை ஆய்வு செய்தனர். அப்போது லோடு வேனில் யாருமே இல்லை.
இதையடுத்து போலீஸார் லோடு வேனை திறந்து பார்த்ததில் 120 கிலோ கஞ்சா இருப்பது தெரியவந்தது. இதைப்பார்த்து அதிர்ச்சியடைந்த போலீசார் அந்த வேனின் உரிமையாளர் யார்? கஞ்சா எப்படி வந்தது? இந்தக் கஞ்சாவை யாரெல்லாம் வந்து வாங்கிச் சென்றனர்? என்று தீவிரமாக விசாரணை செய்து வருகின்றனர்.
English Summary
police seized drungs load auto in thoothukudi gandhipuram