மாடுகளின் கொம்புகளில் ஸ்டிக்கர் ஒட்டிய போலீசார்.. விபத்துகளை தவிர்க்க போலீசாரின் புது முயற்சி.! - Seithipunal
Seithipunal


சென்னை உயர்நீதிமன்றத்தில் திருச்செந்தூர் ராம்குமார் ஆதித்தன் என்பவர் ஒரு பொதுநல மனு தாக்கல் செய்துள்ளார். அந்த மனுவில், மேய்ச்சல் நிலங்கள் ஆக்கிரமிப்பு, நகரமயமாக்கல் உள்ளிட்ட காரணங்களால் தேசிய மற்றும் மாநில நெடுஞ்சாலைகளில் கால்நடைகள் சுற்றி திரிந்து வருகின்றன. 

தமிழக சாலைகளில் கடந்த ஐந்து ஆண்டுகளில் 2000க்கும் அதிகமான உயிரழப்புகள் ஏற்பட்டுள்ளது. அத்துடன் இரவு நேரத்தில் சாலைகளில் படுத்து கிடைக்கின்ற கால்நடைகளால் அதிகபடியான விபத்துகள் நடக்கின்றன. இந்த விபத்துக்களை தடுக்க நாய்கள், மற்றும் கால்நடைகளுக்கு  ஆந்திரா மற்றும் தெலங்கானா மாநிலத்தில் ஒளிபட்டால் பிரதிபலிக்கும் டேப்களை பொருத்தியுள்ளனர்.

அந்த வகையில் சாலையில் சுற்றித் திரிகின்ற கால்நடைகளுக்கு சிவப்பு நிறத்தில் பிரதிபலிக்கின்ற பட்டைகளை பொருத்தும் படி உரிமையாளர்களுக்கு நீதிமன்றம் உத்தரவு பிறப்பிக்க வேண்டும். அதற்கு மறுப்பு தெரிவிக்கும் உரிமையாளர்களுக்கு அபராதம் விதிக்க வேண்டும் என்று தெரிவித்து இருந்தார். 

இந்த மனுவை விசாரித்த நீதிபதிகள் தமிழக உள்துறை, மத்திய சாலைப் போக்குவரத்து துறை, நெடுஞ்சாலை துறை மற்றும் நகராட்சி நிர்வாக துறைகள் 4 வாரங்களில் பதிலளிக்க வேண்டுமென உத்தரவு பிறப்பித்துள்ளனர்.

இந்த நிலையில் விபத்துகளை தவிர்க்கும் வகையில் மாடுகளின் கொம்புகளில் ஒளிரும் ஸ்டிக்கர்களை ஒட்டி போக்குவரத்து காவல்துறையினர் விழிப்புணர்வு செய்து வருகின்றனர்.

 அந்த வகையில் மதுரை ஒத்தக்கடை போக்குவரத்து பிரிவு காவல் ஆய்வாளர் பழனி குமார் தலைமையிலான போக்குவரத்து காவல்துறையினர் சாலையில் சுற்றி தெரியும் மாடுகள் மற்றும் நெடுஞ்சாலைகளில் உள்ள கிராமங்களில் மாடுகளை வைத்திருக்கும் பொது மக்களின் வீடுகளுக்கு சென்று மாடுகளின் கொம்புகளில் ஸ்டிக்கர்களை ஒட்டி விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகின்றனர். காவல்துறையினரின் இந்த செயலுக்கு பொதுமக்கள் பாராட்டு தெரிவித்து வருகின்றனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Police stuck stickers on the horns of cows for avoid accidents


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->