பொள்ளாச்சி எம்.எல்.ஏ. மருத்துவனையில் அனுமதி: நடந்தது என்ன? - Seithipunal
Seithipunal


கோவை, பொள்ளாச்சி தொகுதி அ.தி.மு.க எம்.எல்.ஏவும் முன்னாள் துணை சபாநாயகருமான பொள்ளாச்சி ஜெயராமன் கடந்த சில நாட்களாக தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டிருந்தார். 

அ.தி.மு.க வேட்பாளரை ஆதரித்து கிராமம் கிராமமாக சென்று பொதுமக்கள் இடையே வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். நேற்று பிரச்சாரத்திற்காக தயாராகி இருந்தபோது ஜெயராமனுக்கு திடீரென உடல் நலக்குறைவு ஏற்பட்டது. 

இதனை தொடர்ந்து அவருக்கு உடனடியாக முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டு பின்னர் கோவையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டது. 

அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர்கள் வெயிலின் தாக்கத்தால் உடல் சோர்வடைந்ததாக தெரிவித்தனர். இதனை அடுத்து ஜெயராமன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். 

இது குறித்து மருத்துவர்கள், போதிய அளவு தண்ணீர் குடிக்காததால் ஏற்பட்ட பாதிப்பால் ஜெயராமனுக்கு உடல் நலக்குறைவு ஏற்பட்டுள்ளது. தற்போது சீராக உள்ளார். அவருக்கு தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது என தெரிவித்துள்ளனர்.


 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Pollachi MLA Hospital Admission


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->