பாலிடெக்னிக் தேர்வு தேதி மாற்றம் - காரணம் என்ன? - Seithipunal
Seithipunal


இஸ்லாமிய மக்களின் புனித மாதமான ரமலான் மாதம் தற்போது உலகம் முழுவதிலும் கடைபிடிக்கப்பட்டு வருகிறது. இந்த மாதம் முழுவதும் இஸ்லாமிய மக்கள் நோன்பு இருந்து கடவுளை வணங்குவர். இந்த மதத்தின் இறுதி நாள் அன்று ரம்ஜான் பண்டிகை விடப்படும். அந்த வகையில் இந்த வருடம் ரம்ஜான் பண்டிகை ஏப்ரல் 9 அல்லது 10 ஆம் தேதி கொண்டாடப்படவுள்ளது.

ரம்ஜான் பண்டிகையை முன்னிட்டு பாலிடெக்னிக் தேர்வுகளுக்கான தேதிகளில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. அதாவது, ஏப்ரல் 10 மற்றும் 12-ந் தேதிகளில் நடைபெற இருந்த பாலிடெக்னிக் தேர்வுகள், ஏப்ரல் 23 மற்றும் 24-ந் தேதிகளில் நடைபெறும் என்று தொழில்நுட்பக் கல்வி ஆணையர் தெரிவித்துள்ளார்.

இதற்கு முன்னதாக தமிழகத்தில் ரம்ஜான் பண்டிகையை முன்னிட்டு தொடக்கப்பள்ளி மாணவர்களுக்கான ஆண்டு இறுதித் தேர்வு அட்டவணையில் மாற்றம் செய்யப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

polytecnic exam date change for ramjan festival


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->