தமிழக அரசு ஊழியர்களுக்கு பொங்கல் போனஸ் அறிவிப்பு.. எவ்வளவு தெரியுமா..!! - Seithipunal
Seithipunal


தமிழக அரசின் சி மற்றும் டி பிரிவு அரசு ஊழியர்களுக்கு பொங்கல் போனஸ் வழங்கப்படும் என தமிழக அரசு அறிவித்துள்ளது. இது குறித்து தமிழக அரசு வெளியிட்டுள்ள அறிவிப்பில் "தமிழக அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள், ஓய்வூதியதாரர்கள் மற்றும் குடும்ப ஓய்வூதியதாரர்களுக்கு பொங்கல் பண்டிகையை முன்னிட்டு மிகை ஊதியம் மற்றும் பொங்கல் பரிசு வழங்கப்படும்.

அதன்படி பொங்கல் பரிசாக சி மற்றும் டி பிரிவு பணியாளர்களுக்கு ரூ.3,000, ஓய்வூதியதாரர்களுக்கு ரூ.500 வழங்கப்படும். சிறப்பு கால ஊதியத்தில் பணிபுரியும் பணியாளர்களுக்கு பொங்கல் பரிசாக ரூ.1,000 வழங்கப்படும். முன்னாள் கிராம நிர்வாக அலுவலர்கள் உட்பட சிறப்பு கால ஓய்வூதியத்தில் பணியாற்றி ஓய்வு பெற்ற சிறப்பு ஓய்வூதியம் பெறும் ஓய்வூதியதாரர்களுக்கு ரூ.500 பொங்கல் பரிசாக வழங்கப்படும். இதன் மூலம் தமிழக அரசிற்கு ரூபாய் 221 கோடியே 42 லட்சம் ரூபாய் கூடுதலாக செலவாகும்" என அறிவிக்கப்பட்டுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Pongal Bonus announced for Tamil Nadu Govt Employees


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->