பொங்கல் பரிசு தொகுப்பு! இணையுமா கிழங்கு? அவசர கோரிக்கை!
Pongal Gift 2024 panankilangu
தமிழக அரசு வழங்கும் பொங்கல் பரிசு தொகுப்பில், இந்தாண்டு பனங்கிழங்குகளை அரசே பனைத் தொழிலாளர்களிடம் இருந்து நேரடியாக கொள்முதல் செய்து பொதுமக்களுக்கு வழங்க வேண்டும் என்ற கோரிக்கை பனைத்தொழிலாளர்கள் இடமிருந்து எழுந்துள்ளது.
தூத்துக்குடி மாவட்டதில், வேம்பார், தாப்பாத்தி, தொப்பம்பட்டி, சொக்கலிங்கபுரம், ஆற்றங்கரை, அயன் வடமலாபுரம், குளத்தூர், பனையூர் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் சுமார் 1500-க்கும் மேற்பட்ட பனைத்தொழிலாளர்கள் பனைத்தொழிலில் ஈடுபட்டு வருகின்றனர்.
ஆடி மாதத்தில் பனங்கொட்டைகளை மண்ணுக்கடியில் புதைத்து, மார்கழி, தை மாதங்களில் விளைந்த பனங்கிழங்குகளை அறுவடை செய்து தமிழகம் முழுவதும் வியாபாரிகள் மூலம் விற்பனை செய்து வருகின்றனர்.
அதிக ருசித்தன்மையுடனும், மருத்துவகுணத்துடனும் உள்ள இந்த பனங்கிழங்கு தொழிலில் போதிய அளவில் லாபம் கிடைப்பதில்லை என்று பனைத்தொழிலாளர்கள் தெரிவிக்கின்றனர்.
தற்போது தமிழக அரசு வழங்கும் பொங்கல் பரிசு தொகுப்பில் பனங்கிழங்குகளை அரசே பனைத் தொழிலாளர்களிடம் இருந்து நேரடியாக கொள்முதல் செய்து பொதுமக்களுக்கு பனைத் தொழிலாளர்களுக்கு பேருதவியாக இருக்கும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.
English Summary
Pongal Gift 2024 panankilangu