''பொங்கல் தொகுப்பு'': டோக்கன் இல்லாதவர்களுக்கு இன்று வினியோகம்! - Seithipunal
Seithipunal


பொங்கல் பண்டிகையை பொதுமக்கள் சிறப்பாக கொண்டாடுவதற்காக தமிழக அரசு சார்பில் பச்சரிசி, சர்க்கரை, கரும்பு, ரூ. 1000 போன்றவை ரேஷன் கடையில் வழங்கப்பட்டு வந்தது. 

சென்னையில் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் கடந்த பத்தாம் தேதி இந்த துரித தொகுப்பை தொடங்கி வைத்த நாளில் இருந்து மாநிலம் முழுவதும் பொது மக்களுக்கு பரிசு தொகை வழங்கப்பட்டது. 

2 கோடியே 19 லட்சம் அரிசி அட்டைதாரர்கள் அனைவருக்கும் இந்த பொங்கல் பரிசு தொகை வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டது. 

இதில் டோக்கன் பெறாத 4 லட்சம் பேர் 14ஆம் தேதி ரேஷன் கடைகளுக்கு வந்து பொங்கல் பரிசு தொகுப்பு பெற்றுக்கொள்ளலாம் என அரசு அறிவித்திருந்தது. 

அதன்படி, இன்று காலை முதல் டோக்கன் இல்லாதவர்களுக்கு ரேஷன் கடைகளில் பொங்கல் தொகுப்பு வழங்கப்பட்டது. இதுவரை 95% பேர் பொங்கல் பரிசு தொகுப்பு வாங்கி விட்டதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

pongal package distribution today tokenless people


கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?



Advertisement

கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?




Seithipunal
--> -->