ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் தபால் வாக்குப்பதிவு தொடங்கியது..!!
Postal Voting started in Erode East byelection
ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலுக்கான தபால் வாக்குகளை சேகரிக்கும் பணியில் தேர்தல் நடத்தும் அலுவலர்கள் ஈடுபட்டு வருகின்றனர்..!
ஈரோடு கிழக்கு தொகுதிக்கான இடைத்தேர்தல் வரும் பிப்ரவரி 27ஆம் தேதி நடைபெற உள்ளது. இந்த நிலையில் பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்கள் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த நிலையில் ஈரோடு கிழக்கு தொகுதிக்கு உட்பட்ட பகுதிகளில் 80 வயதுக்கு மேற்பட்ட மூத்த குடிமக்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகள் தங்களது வாக்குகளை பதிவு செய்ய தபால் வாக்கு முறைக்கு இந்திய தேர்தல் ஆணையம் ஏற்பாடு செய்துள்ளது.
இந்த நிலையில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டோர் மாற்றுத்திறனாளிகள் மற்றும் 80 வயதுக்கு மேற்பட்ட மூத்த குடிமக்கள் என 5,681 பேர் தபால் வாக்கு செலுத்த விண்ணப்பித்திருந்தனர். இதனைத் தொடர்ந்து தபால் வாக்குகள் செலுத்தும் விதமாக ஒரு தேர்தல் நடத்தும் அலுவலர், ஒரு கண்காணிப்பு அலுவலர், நுண்பிரிவு அலுவலர், 2 ஆயுதம் ஏந்திய போலீசார் உட்பட 10 பேர் கொண்ட குழு இன்று காலை தபால் வாக்குகளை சேகரிக்கும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
English Summary
Postal Voting started in Erode East byelection