பெட்ரோல் நிலையத்திலிருந்து ஓட்டம் பிடித்த போக்சோ கைதி! தீவிர தேடுதல் வேட்டையில் போலீசார்!
prisoner escaped petrol station Police search
கடந்த 2018 ஆம் ஆண்டு முதல் செயல்படுத்தப்பட்டு சிறை கைதிகளால் நடத்தப்படும் பெட்ரோல் நிலையத்தில் இருந்து போக்சோ குற்றவாளி தப்பி சென்றது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இது தொடர்பாக கோயம்புத்தூர் மத்திய சிறைச்சாலையின் 3 அதிகாரிகள் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளனர். மேலும் தப்பி ஓடிய 32 வயதான போக்சோ குற்றவாளியையும் போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர்.
இது குறித்து சிறைத்துறை அதிகாரிகள் தெரிவித்திருப்பதாவது, ''நீலகிரி, கூடலூரை சேர்ந்த விஜயரத்தினம் போக்சோ வழக்கில் கைது செய்யப்பட்டு 10 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டு கடந்த 2019 ஆம் ஆண்டு சிறையில் அடைக்கப்பட்டார்.
நன்னடத்தை அடிப்படையில் இவர் உள்பட 20 சிறை கைதிகள் பாரதியார் சாலையில் அமைக்கப்பட்டிருக்கும் விடுதலை பெட்ரோல் நிலையத்தில் பணியாற்ற தேர்வு செய்யப்பட்டிருந்தனர்.
தமிழகத்தின் சிறை துறையும், இந்தியன் ஆயில் நிறுவனமும் இணைந்து இந்த பெட்ரோல் நிலையம் கடந்த 2018 முதல் செயல்பட்டு வருகிறது.
இங்கு பணியாற்றும் கைதிகளை சிறைத்துறை காவலர்கள் கவனித்து பணி முடிந்ததும் சிறைக்கு அழைத்துச் செல்வார்கள். இதற்காக அவர்களுக்கு மாதம் ரூ. 6 ஆயிரம் வரை ஊதியம் வழங்கப்படும்.
இந்நிலையில் நேற்று முன்தினம் இரவு பணியில் இருந்த விஜயரத்தினம் உள்பட 8 பேரை நேற்று காலை சிறை வாகனம் மூலம் சிறைக்கு அழைத்துச் செல்லப்பட்டது.
அதில் விஜயரத்தினம் இல்லை என்பது தெரியவந்தது. இது குறித்து உடன் வேலை செய்து கொண்டிருந்த சிறை கைதிகள் இடம் விசாரணை நடத்தி பின்னர் சிசிடிவி கேமரா காட்சிகளை ஆய்வு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
இதனால் கண்காணிப்பு பணியில் இருந்த 3 சிறைகாவலர்கள் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளனர். மேலும் சிறை கைதிகள் பணியாற்றும் விடுதலை பெட்ரோல் நிலையங்களில் 24 மணி நேரமும் கண்காணிப்பை தீவிர படுத்தப்பட்டுள்ளது.
கடந்த 2019 ஆம் ஆண்டு முதல் செயல்படுத்தப்பட்ட வந்த இந்த திட்டத்தில் குடும்பச் சூழல், குற்ற பின்னணி உள்ளிட்ட அனைத்தையும் ஆராய்ந்து பிறகு சிறை கைதிகள் இந்த வேலைக்கு தேர்வு செய்யப்படுகின்றனர்.
அதிலும் 4 ஆண்டுகள் சிறை தண்டனைக்கு பிறகு இந்த பணிக்கு அனுப்பப்பட்டு அவர்களது ஊதியம் அவர்களது குடும்பத்திற்கு அனுப்பி வைக்கப்படும்'' என சிறை துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
English Summary
prisoner escaped petrol station Police search