பரபரப்பு! போலீஸ்க்கு தண்ணி காட்டிவிட்டு தப்பியோடிய கைது! - Seithipunal
Seithipunal


அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்ட கைதி தப்பி ஓடிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

குட்கா கடத்தல் வழக்கில் கைது செய்யப்பட்ட நெல்லை மாவட்டம் கரைஇருப்பு வடக்கு தெருவை சேர்ந்தவர் ஆறுமுகம். இவரது மகன் மணிகண்டன். இவர் தற்போது கரைஇருப்பு ரைஸ் மில் தெருவில் மாணவி மற்றும் குழந்தைகளுடன் வசித்து வருகிறார். இவர் மீது பல்வேறு குட்கா கடத்திய வழக்குகள் நிலவையே உள்ளது.

கடந்த 25 ஆம் தேதி போலீசார் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். இந்த நிலையில் நேற்று முன் தினம் அவருக்கு திடீரென வயிற்றுப்போக்கு ஏற்பட்டதால் அவரை சிகிச்சைக்காக  சிறைச்சாலை அதிகாரிகள் அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர்.

அழைத்து சென்று அங்க சிகிச்சை பெற்று வந்த கைதி திடீரென அதிகாலை அங்கிருந்து தப்பி ஓடியதாக கூறப்படுகிறது. பாதுகாப்பில் இருந்த போலீஸ் அவரை துரத்தி சென்று பிடிக்க முயற்சி செய்து உள்ளார். பின்னர் இது குறித்து அவரது மேல் அதிகாரிகளுக்கு தகவல் கொடுத்ததின் பெரில்  அவர் மீது வழக்கு பதிவு செய்து தப்பி ஓடிய கைதியை  தீவிரமாக தேடி வருவதாக தகவல் வெளியாகி உள்ளது.

இது குறித்த சம்பவம் தச்சநல்லூர் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு மணிகண்டனின் உறவினர் வீடுகளில் காவல்துறை தேடுதல் வேட்டையில் இறங்கி உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த கைதி திடீரென தப்பி ஓடிய சம்பவம் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

prisoner who was admitted to a government hospital for treatment escaped


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->