#Breaking :: தனியார் நிறுவனத்தின் மென்பொருளே காரணம்! அரசு கேபிள் டிவி நிறுவனத்தின் விளக்கம்!
private company response to problem of PACTV connectivity
தமிழகம் முழுவதும் நேற்று முதல் அரசு கேபிள் நிறுவனத்தின் சேவை பாதிக்கப்பட்டுள்ளது. பல்வேறு மாவட்டங்களில் அரசு கேபிள் நிறுவனத்தின் சேவை பாதிக்கப்பட்டுள்ளதால் மக்கள் பெரும் அவதிக்குள்ளாகி உள்ளனர். இந்த நிலையில் தமிழ்நாடு அரசு கேபிள் நிறுவனம் சார்பாக விளக்க அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது.
அந்த அறிக்கையில் "நேற்று முதல் தமிழ்நாடு அரசு கேபிள் நிறுவனத்திற்கு மென்பொருள் சேவை வழங்கி வந்த தனியார் நிறுவனத்தை மென்பொருள் சேவைகளில் திடீர் தடை ஏற்பட்டதால் அரசு கேபிள் டிவி நிறுவனத்தின் சேவை பல பகுதிகளில் உள்ள செட்டாப் பாக்ஸ்களில் தடங்கள் ஏற்பட்டது.
பாதிப்புகளை உடனடியாக சரி செய்ய தொழில்நுட்பக் குழு முழு வீச்சில் செயல்பட்டு வருகிறது. அதிகபட்சம் இன்னும் 24 மணி நேரத்திற்குள் தொழில்நுட்பக் கோளாறுகள் முழுமையாக சரி செய்யப்படும். அரசு கேபிள் நிறுவனத்திற்கு ஒத்துழைப்பு வழங்கும்படி கேபிள் ஆபரேட்டர்கள், பொதுமக்கள், வாடிக்கையாளர்கள் அனைவரையும் பணிவுடன் கேட்டுக்கொள்கிறோம். மேலும் அந்த தனியார் நிறுவனத்தின் மீது சட்ட நடவடிக்கைகள் மேற்கொள்ளவும் கேபிள் டிவி நிறுவனம் நடவடிக்கைகளை எடுத்து வருகிறது" என அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
English Summary
private company response to problem of PACTV connectivity