சர்ச்சை பேச்சு! நாற்றமெடுத்த நாகரிகம் தான் உங்களுடையது! - துரைமுருகன்
Controversial speech Yours is the stinking civilization Duraimurugan
அமைச்சர் துரைமுருகன், தமிழ்நாடு எம்.பி.க்களை நாகரிகமற்றவர்கள் என மத்திய அமைச்சர் பேசியதை கண்டித்த கருத்துக்கள் தற்போது சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.மத்திய அரசு கல்வி நிதியை வழங்காமல் இருப்பது தொடர்பாக மத்திய, மாநில அரசுகள் இடையே கருத்துகள் கடுமையாக நடைபெற்று வருகிறது.

இது தொடர்பாகப் பாராளுமன்றத்தில் கேள்வி எழுப்பிய தமிழக எம்.பி.க்களை,மத்திய அமைச்சர் தர்மேந்திர பிரதான் கொச்சையாக பேசியதைக் கண்டித்து தி.மு.க. எம்.பிக்கள் போராட்டம் நடத்தினர்.இந்த நிலையில் தமிழக நீர்பாசனத் துறை அமைச்சர் துரைமுருகன், வேலூரில் திமுக சார்பில் நடந்த கர்ப்பிணி பெண்களுக்கான சமுதாய வளைகாப்பு நிகழ்ச்சியில் கலந்து கொண்டார்.
இந்த விழாவில் அமைச்சர் துரைமுருகன் மத்திய அரசைக் கண்டித்து காட்டமாகக் கருத்து தெரிவித்தார். அப்போது அவர் பேசியதாவது, "ஒருத்தனுக்கு ஒருத்தி என்பதுதான் தமிழனின் நாகரிகம்.
ஆனால் வடநாட்டவன் அப்படியல்ல. அங்கு 5 பேர் இருந்தாலும், 10 பேர் இருந்தாலும் ஒருத்தியைத் திருமணம் செய்து கொள்வார்கள். ஒருவன் போய்விட்டால் மற்றொருவன் வருவான்.
இந்த நாற்றமெடுத்த நாகரிகம்தான் உங்களுடையது. தமிழனைத் தவறாக பேசினால் நாக்கை அறுத்துவிடுவான், ஜாக்கிரதை" எனப் பேசியுள்ளார்.அமைச்சர் துரைமுருகனின் இந்தக் கருத்துக்கள் தற்போது சர்ச்சையைக் கிளப்பியுள்ளது.
English Summary
Controversial speech Yours is the stinking civilization Duraimurugan