எச்சரிக்கை! நாளை மறுநாள் முதல் தமிழகத்தில் வெப்பத்தின் தாக்கம் அதிகரிக்கும்....!
Warning The heat wave will increase in Tamil Nadu from the day after tomorrow
தமிழ்நாட்டில் வெயிலுக்கு இதமாக சில இடங்களில் சில நாட்களாக மழை பெய்து வருகிறது.இதில் தமிழக கடலோரப் பகுதிகளையொட்டிய தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளின் மேல் நிலவிய வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக இந்த மழை பொழிந்தது என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்தது.

இதனால் கடந்த 24 மணி நேரத்தில் தமிழகத்தில் பரவலாக வெப்பத்தின் தாக்கம் குறைந்துள்ளது. மேலும் தமிழ்நாட்டின் பெரும்பாலான இடங்களில் 5 முதல் 8 டிகிரி செல்சியஸ் வரை வெப்பம் குறைவாக பதிவானது.
இந்நிலையில், தமிழகத்தில் இன்றும் நாளையும் வெப்பத்தின் தாக்கம் இயல்பை விட குறைவாகவே இருக்கும் என தெரிவித்துள்ள வானிலை மையம், நாளை மறுநாள் முதல் வெப்பத்தின் தாக்கம் அதிகரிக்கும் என எச்சரிக்கை விடுத்துள்ளது.
கோடை வெயில் வாட்டி வதைத்து வந்த நிலையில், இனி தமிழகத்தின் ஒரு சில இடங்களில் 2-3 டிகிரி செல்சியஸ் வரை வெப்பநிலை அதிகரிக்க வாய்ப்புள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது.
English Summary
Warning The heat wave will increase in Tamil Nadu from the day after tomorrow