#BREAKING:: கலாஷேத்ரா பாலியல் புகார்.. பேராசிரியர் "ஹரி பத்மனை" தட்டி தூக்கிய தனிப்படை..!! - Seithipunal
Seithipunal


சென்னை திருவான்மியூரில் கலாஷேத்ரா அறக்கட்டளையின் ருக்மணி தேவி நுண்கலை கல்லூரி  செயல்பட்டு வருகிறது. இந்த கல்லூரி மத்திய அரசின் நிதியுதவி உடன் இயங்கி வரும் நிலையில் மாணவிகளுக்கு தொடர்ந்து பாலியல் தொல்லை அளிக்கப்படுவதாக பரபரப்பு புகார் எழுந்தது. இந்த விவகாரத்தில் சம்பந்தப்பட்ட பேராசிரியர் உள்ளிட்ட 4 பேரை கைது செய்ய வேண்டும் என்று மாணவிகள் பல்வேறு கட்டப் போராட்டங்களை நடத்தி வந்தனர்.

பாலியல் தொல்லை கொடுத்த பேராசிரியர்களை கல்லூரி இயக்குநர் ரேவதி ராமச்சந்திரன் காப்பாற்ற நினைப்பதாக குற்றச்சாட்டை முன்வைத்த மாணவிகள். நடனத் துறை தலைவர் ஜோஸ்லின் மேனன் குற்றவாளிகளுக்கு உறுதுணையாக இருப்பதாகவும் குற்றம் சாட்டி இருந்தனர். இந்த விவகாரம் தேசிய அளவில் விஸ்வரூபம் எடுத்த நிலையில் தமிழக காவல்துறையினர் மற்றும் மகளிர் ஆணையம் என அடுத்தடுத்து விசாரணையில் இறங்கினர்.

தமிழக மாநில மகளிர் ஆணைய தலைவி குமாரியிடம் மாணவிகள் எழுத்துப்பூர்வமாக புகார் அளித்திருந்தனர். பாலியல் தொல்லை விவகாரம் குறித்து தமிழக சட்டமன்றத்தில் பேசிய முதல்வர் மு.க ஸ்டாலின் உரிய விசாரணை நடத்தப்பட்டு தவறு செய்தவர்கள் யாராக இருந்தாலும் சட்டப்படி கட்டாயம் நடவடிக்கை எடுக்கப்படும் என்று உறுதி அளித்துள்ளார். மேலும் மாணவிகளின் பாதுகாப்பிற்கு தேவையான அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்படும். கல்லூரியில் ஒரு பெண் ஆய்வாளர் தலைமையில் போலீஸ் பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக பேராசிரியர் ஹரி பத்மன் மீது வழக்குப்பதிவு செய்து கைது செய்ய தமிழக காவல்துறை தீவிரம் காட்டி வந்தது. இந்த விவகாரத்தில் உடனடியாக விசாரணைக்கு ஆஜராகுமாறு ஹரி பத்மனுக்கு காவல்துறையினர் சார்பில் நோட்டீஸ் அனுப்பப்பட்டது.

இந்த விவகாரம் பெரும் சர்ச்சை ஏற்படுத்தி இருந்த நிலையில் கடந்த 30ஆம் தேதி மாணவ, மாணவிகள் உடன் ஹைதராபாதில் நடைபெற இருந்த நிகழ்ச்சிக்கு பேராசிரியர் ஹரி பத்மன் சென்றிருந்தார். இதனைத் தொடர்ந்து அனைத்தையும் முடித்து விட்டு சென்னை திரும்பிய பிறகு அவர் எங்கு சென்றார் என்று தெரியவில்லை. இந்த விவகாரத்தில் ஹரி பத்மன் தலைமறைவாகி உள்ளதாக செய்திகள் வெளியாகின.

இந்த நிலையில் பாலியல் புகார் வழக்கில் தேடப்பட்டு வந்த சென்னை கலாஷேத்ரா கல்லூரி பேராசிரியர் ஹரி பத்மன் இன்று அதிகாலை கைது செய்யப்பட்டுள்ளார். தலைமறைவாக இருந்த ஹரி பத்மனை சென்னை காவல்துறையினர் தனிப்படை அமைத்து தேடி வந்த நிலையில் கைது செய்துள்ளனர். கைது செய்யப்பட்ட ஹரி பத்மனிடம் பாலியல் புகார் தொடர்பாக காவல்துறையினர் தீவிரமாக விசாரணை நடத்தி வருகின்றனர். 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Professor arrested Hari badman Kalashetra sex complaint


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->