PFI அமைப்புக்கு தடை - அரசாணை வெளியிட்டது தமிழக அரசு! - Seithipunal
Seithipunal


மத்திய அரசை தொடர்ந்து தற்போது தமிழக அரசும் PFI அமைப்புக்கு தடை விதித்து அரசாணை வெளியிட்டுள்ளது!

நாடு முழுவதும் ஆப்ரேஷன் ஆக்டோபஸ் என்ற தீவிரவாத தடுப்பு சோதனை கடந்த ஒரு வாரமாக பாப்புலர் பிரண்ட் ஆப் இந்தியா மற்றும் எஸ்டிபிஐ கட்சிக்கு சொந்தமான இடங்களில் சோதனையை என்ஐஏ மற்றும் அமலாக்கத்துறையினர் இணைந்து சோதனை செய்தனர். இந்த சோதனையின் போது 356 பேர் கைதானார்கள். அதில் 11 பேர் தமிழ்நாட்டைச் சேர்ந்தவர்கள். மேலும் கேரளா, புதுடெல்லி, தெலுங்கானா உட்பட 20க்கும் மேற்பட்ட மாநிலங்களில் சோதனை நடைபெற்றது. 

நேற்று மத்திய அரசின் கூடுதல் செயலாளர் பிரவீன் வசிஷ்டா மத்திய அரசின் சார்பாக அறிக்கை ஒன்றை வெளியிட்டிருந்தார்.

அந்த அறிக்கையில் "பாப்புலர் ஃப்ரண்ட் ஆப் இந்தியா மற்றும் அதன் துணை அமைப்புகளான ஆல் இந்தியா இமாம்ஸ், கவுன்சில் கேம்பஸ் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா, மறுவாழ்வு இந்தியா அறக்கட்டளை, தேசிய மனித உரிமைகள் அமைப்பு, தேசிய மகளிர் முன்னணி, ஜூனியர் முன்னணி, அதிகாரம் இந்தியா அறக்கட்டளை, மறுவாழ்வு அறக்கட்டளை இந்தியா முழுவதும் செயல்பட்டு வருகின்றன. 

இந்த அமைப்புகள் வெளி உலக பார்வைக்கு சமூக அமைப்பாகவும் அரசியல் அமைப்பாகவும், கல்வி ரீதியாக ஏற்பாடு செய்யக்கூடிய அமைப்பாகவும் காட்டிக்கொண்டு உள்ளனர். உள்ளுக்குள் அவர்களுக்கு என மறைமுக கோட்பாடுகள் உள்ளன. அக்கோட்பாடு என்னவென்றால் நாட்டின் அமைதிக்கு குந்தகம் விளைவிப்பது, சமூக நல்லிணக்கத்தை கெடுப்பது, இந்தியாவின் பாதுகாப்பிற்கும் இறையாண்மைக்கும் எதிராக செயல்படுவது போன்ற விஷயங்களில் இவர்கள் ஈடுபட்டு வருகின்றனர்" என நேற்று அறிக்கை வெளியிட்டிருந்தது.

இதன் காரணமாக பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா அமைப்பு மற்றும் அதன் துணை அமைப்புகளை தடை செய்வதாக மத்திய அரசு நேற்று அறிவித்திருந்தது. இந்நிலையில் இன்று தமிழக அரசு இது தொடர்பான அரசாணையை வெளியிட்டுள்ளது.

அந்த அரசாணை அடிப்படையில் சட்டவிரோத நடவடிக்கைகள் தடுப்பு சட்டம் 1967 மற்றும் மத்திய சட்டம் 1967 இந்திய அரசியல் சட்டம் பிரிவு 3ன் கீழ் பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா அமைப்பை சட்டவிரோத அமைப்பாக அறிவிக்கப்பட்டுள்ளது. 

அதன் காரணமாக மாநில அரசுகளுக்கு அதிகாரங்கள், மாவட்ட ஆட்சியர் மற்றும் மாவட்ட கண்காணிப்பாளருக்கு அதிகாரங்கள் வழங்கப்பட்டுள்ளன. அதனை செயல்படுத்துவதற்கான நடவடிக்கையின் அடிப்படையில் பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா அமைப்பு தடை செய்து தமிழக அரசு அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.

அதிகாரப் பதிவு அடிப்படையில் மாவட்ட ஆட்சியர் மற்றும் மாவட்ட கண்காணிப்பாளர்களுக்கு அதிகாரம் வழங்கப்பட்டுள்ளது. நேற்று கேரளா அரசு PFI அனைத்து தடை செய்த நிலையில் இன்று தமிழக அரசு பதிவு செய்து அரசாணை வெளியிட்டுள்ளது. 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Prohibition of PFI system Tamil Nadu government has issued an ordinance


கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?



Advertisement

கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?




Seithipunal
--> -->