தாகம் தீர்க்க நீர் மோர் வழங்குங்கள்.. சமூக ஆர்வலர்கள் வேண்டுகோள்.! - Seithipunal
Seithipunal


ஆண்டிபட்டியில் வாசவி கிளப் மற்றும் கனெக்சன் மொபைல் வேர்ல்ட் நிறுவனத்தின் சார்பில் ஒன்பதாவது நாளாக தேனி மெயின் ரோட்டில் நீர் மோர் பந்தல் அமைத்து, பொதுமக்களின் தாகத்தை தீர்த்து வருகின்றனர் .
 
நாளுக்கு நாள் வெயிலின் உக்கிரம் அதிகமாகி, பொதுமக்களை வாட்டி வதைத்து வருகிறது .வானிலை மையம் ஒவ்வொரு நாளும் வெயிலின் தாக்கம் இரண்டு டிகிரி ஐந்து டிகிரி அதிகமாகும் என்று எச்சரித்து வருகிறது. பல்வேறு மருத்துவ நிபுணர்கள் மதியம் 12 முதல் மணி முதல் 3 மணி வரை பொதுமக்கள் யாரும் வெயிலில் அலைய வேண்டாம் என்று கூறி வருகின்றனர்.

 இந்நிலையில் பல்வேறு அலுவல்கள் நிமித்தமாகவும், வியாபாரம் ,விவசாய பொருள்களை சந்தைப்படுத்துதல் உள்ளிட்ட காரணங்களுக்காக கிராமப்புறங்களில் இருந்தும், வெளியூர்களில் இருந்தும் ஏராளமான மக்கள் நகர் பகுதியில் நோக்கி வந்து கொண்டிருக்கின்றனர். பள்ளி மாணவ மாணவியர்கள் கட்டாயம் வெயிலை பொருட்படுத்தாமல் பள்ளிகளுக்கு செல்ல வேண்டிய நிர்ப்பந்தத்தில் உள்ளனர். அவர்களின் தாகம் தீர்க்க பொதுநல அமைப்புகளும், நிறுவனங்களும் முன்வந்து, ஆங்காங்கே முக்கிய இடங்களில் பொதுமக்களுக்கு நீர் , மோர் உள்ளிட்ட பானங்களை வழங்க வேண்டும் என்று சமூக ஆர்வலர்கள் தெரிவித்துள்ளனர்.

 இதனை முன்னிட்டு தேனி மாவட்டம், ஆண்டிபட்டியில் வாசவி கிளப் மற்றும் கனெக்சன் மொபைல் வேர்ல்ட் நிறுவனத்தின் சார்பில் ஒன்பதாவது நாளாக தேனி மெயின் ரோட்டில் நீர் மோர் பந்தல் அமைத்து, பொதுமக்களின் தாகத்தை தீர்த்து வருகின்றனர் .இவர்களின் செயலை சமூக ஆர்வலர்களும் ,பொதுமக்களும் பாராட்டி வருகின்றனர் .இதே போல் பல்வேறு அமைப்புகளும் முன்வரும் பட்சத்தில் ஓரளவாவது சுட்டெரிக்கும் வெயிலின் தாக்கத்திலிருந்து பொதுமக்களை பாதுகாக்கலாம் என்று கருத்து நிலவுகிறது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Provide water buttermilk to quench thirst Social activists appeal


கருத்துக் கணிப்பு

பாஜக, காங்கிரஸ் கட்சியின் தமிழக தலைவர்கள் மாற்றம் குறித்த செய்தி...



Advertisement

கருத்துக் கணிப்பு

பாஜக, காங்கிரஸ் கட்சியின் தமிழக தலைவர்கள் மாற்றம் குறித்த செய்தி...




Seithipunal
--> -->