#தமிழகம் || அடி, உதை, கொல்லு., பப்ஜி விளையாட்டால் வந்த வினை.! தூக்கத்தில் கையை வெட்டிய ராமசாமி.! - Seithipunal
Seithipunal


ஆன்லைன் மூலமாக விளையாடும் விளையாட்டான பப்ஜி விளையாட்டு காரணமாக பல குற்றச் சம்பவங்கள் அதிகரிக்கத் தொடங்கியுள்ளன. அண்மையில் பாகிஸ்தான் நாட்டில் பப்ஜி விளையாட்டை விளையாட கூடாது என்று சிறுவனை கண்டித்ததால், அந்த சிறுவன் குடும்பத்தில் உள்ள மொத்த நபரையும் துப்பாக்கியால் சுட்டுக் கொலை செய்த சம்பவம் அரங்கேறி உள்ளது.

இந்தியாவிலும் இந்த பப்ஜி விளையாட்டு காரணமாக பல தற்கொலை சம்பவங்கள் அரங்கேறி உள்ளன. இந்த ஆன்லைன் பப்ஜி விளையாட்டை விளையாடும் சிறுவர்கள், அதற்கு அடிமையாகி நாள்முழுவதும் விளையாடும் நிலைமைக்கு சென்று விடுகின்றனர்.

இந்த நிலையில், திருப்பூர் அருகே இரவு நேரத்தில் பக்கத்து வீட்டு முதியவரை தூங்கவிடாமல், நண்பர்களுடன் பப்ஜி விளையாடிக் கொண்டிருந்த வாலிபரின் கையை, ஆத்திரம் அடைந்த முதியவர் வெட்டிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

திருப்பூர் மாவட்டம், முருகம்பாளையம் பாறைக்காடு பகுதியை சேர்ந்தவர் கார்த்திக். 19 வயதான இவர் தாராபுரத்தில் உள்ள ஒரு அரசு ஐடிஐ கல்லூரியில் இரண்டாம் ஆண்டு படித்து வருகிறார். 

இந்நிலையில், வீட்டுக்கு அருகே கார்த்திக் தனது நண்பர்களுடன் இரவு பப்ஜி விளையாடிக் கொண்டிருந்தார். அப்போது கார்த்திக் அவர் நண்பர்கள் சத்தமிட்டுக் கொண்டே., கொல்லு அவனை, அடி., விடாதே., என்ற வார்த்தைகளைச் சொல்லி பப்ஜி விளையாடியதாக தெரிகிறது. 

இதனால் பக்கத்து வீட்டை சேர்ந்த 65 வயது ராமசாமி என்ற முதியவர், தூங்குவதற்கு இடையூறாக இவர்கள் சத்தம் போடுவதை தட்டி கேட்டுள்ளார்.  இதனால் முதியவருக்கும், கார்த்திக் மற்றும் அவரின் நண்பர்களுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது.

இதனால் ஆத்திரமடைந்த ராமசாமி, உடனடியாக வீட்டுக்குச் சென்று அரிவாளை எடுத்து வந்து கார்த்திக்கின் கையை ஒரே வெட்டாக வெட்டினார். இதில் படுகாயமடைந்த கார்த்திகை மீட்டு கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்துள்ளனர்.

இதுகுறித்த புகாரின் பேரில் வீரபாண்டி காவல் நிலைய போலீசார் வழக்கு பதிவு செய்து ராமசாமியை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

ராமசாமி ஏற்கனவே ஒரு கொலை வழக்கு சம்பந்தமாக சிறை தண்டனை அனுபவித்து, கடந்த மூன்று ஆண்டுகளுக்கு முன்புதான் விடுதலையாகி வந்திருந்தார் என்று போலீசார் தரப்பில் சொல்கின்றனர்.
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

pubg game issue in thiruppur


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->