திட்டமிட்டபடி தேர்வு முடிவுகள் வெளியாகும் - அரசு தேர்வுத்துறை அதிரடி அறிவிப்பு.! - Seithipunal
Seithipunal


தமிழகத்தில் பன்னிரெண்டாம் வகுப்பு மாணவர்களுக்கு கடந்த மார்ச் மாதம் 1-ந்தேதி முதல் 22-ந்தேதி வரையிலும், பதினொன்றாம் வகுப்பு மாணவர்களுக்கு மார்ச் 4-ந்தேதி முதல் 25-ந்தேதி வரையிலும், பத்தாம் வகுப்பு மாணவர்களுக்கு மார்ச் 26-ந்தேதி முதல் கடந்த மாதம் 8-ந்தேதி வரையிலும் பொதுத்தேர்வு நடந்து முடிந்தது. 

இதையடுத்து பன்னிரெண்டாம் வகுப்பு விடைத் தாள்கள் திருத்தும் பணி கடந்த மாதம் 13-ந்தேதியும், பத்தாம் வகுப்பு விடைத்தாள்கள் திருத்தும் பணி 22-ந்தேதியும் நிறைவடைந்தன. இதுதவிர பதினொன்றாம் வகுப்புக்கான விடைத்தாள் திருத்தும் பணி அரியர் மாணவர்களுக்கு கடந்த மாதம் 13-ந்தேதியுடனும், மற்ற மாணவர்களுக்கு 25-ந்தேதியுடனும் முடிவடைந்தது. 

இதைத் தொடர்ந்து மாணவ-மாணவிகள் பெற்ற மதிப்பெண்களை இணையதளத்தில் பதிவேற்றும் பணிகள் நடைபெற்று வருகின்றன. திட்டமிட்டபடி எஸ்.எஸ்.எல்.சி, பிளஸ்-1, பிளஸ்-2 பொதுத் தேர்வு முடிவுகள் வெளியாக இருப்பதாக அரசு தேர்வுத் துறை உயர் அதிகாரி தெரிவித்தார்.

அதன்படி பன்னிரெண்டாம் வகுப்புக்கு வருகிற 6-ந்தேதியும், பத்தாம் வகுப்புக்கு 10-ந்தேதியும், பதினொன்றாம் வகுப்புக்கு 14-ந்தேதியும் தேர்வு முடிவுகள் வெளியாக உள்ளது. வழக்கம்போல் தேர்வு முடிவுகளை வீட்டில் இருந்தபடியே மாணவர்கள் செல்போன் மற்றும் இணைய தளங்களில் பார்த்து தெரிந்து கொள்ள முடியும்.
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

public exam result update


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->