4 மாவட்டங்களுக்கு நாளையும் பொது விடுமுறை: தமிழக அரசு அதிரடி அறிவிப்பு! - Seithipunal
Seithipunal


மிக்ஜம் புயல் காரணமாக சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம் ஆகிய 4 மாவட்டங்களுக்கும் நாளை பொது விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. 

வங்க கடலில் உருவாகியுள்ள மிக்ஜம் புயல் காரணமாக நேற்று மாலை முதல் சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் பலத்த காற்றுடன் கனமழை பெய்து வருகிறது. 

புயல் தற்போது தீவிரமடைந்துள்ள நிலையில் சென்னை கடற்கரை அருகில் வலுப்பெற்றுள்ளது. ஆந்திரா கடற்கரையை நோக்கி நாளை காலை கடக்கவுள்ள நிலையில் திருவள்ளூர் மாவட்டத்தில் இன்று அதிகாலை மழை பெய்ய வாய்ப்பு தெரிவித்துள்ளது. 

மேலும் சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம் மற்றும் ராணிப்பேட்டை மாவட்டங்களில் கன மழை பெய்யும் எனவும்  திருவண்ணாமலை, விழுப்புரம், வேலூர் மாவட்டங்களில் மிதமான மழை பெய்யக்கூடும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

இந்நிலையில் புயல் காரணமாக சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம் ஆகிய 4 மாவட்டங்களுக்கு நாளையும் பொது விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Public holiday 4 districts tomorrow


கருத்துக் கணிப்பு

இந்த கனமழையை தமிழக அரசு எதிர்கொண்ட விதம்...!



Advertisement

கருத்துக் கணிப்பு

இந்த கனமழையை தமிழக அரசு எதிர்கொண்ட விதம்...!




Seithipunal
--> -->