"என்னை போல யாருக்குமே நடக்கக்கூடாது தாயே." போக்ஸோ குற்றவாளியின் கதறல்.!
pudhukottai pocso criminal crying in court
புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள தச்சங்குறிச்சி பகுதியைச் சேர்ந்த காமராஜ் என்பவருக்கு 37 வயதாகும் நிலையில் அவர் தனது வீட்டிற்கு அருகில் விளையாடிக் கொண்டிருந்த 15 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்தார். இந்த சம்பவம் நடந்த 2001 இல் நடைபெற்றது.
இது குறித்து சிறுமியின் தாயார் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளிக்க அந்த புகாரின் பேரில் காமராஜ் கைது செய்யப்பட்டார். இது குறித்த வழக்கை விசாரித்த நீதிபதி காமராஜருக்கு ஒரு லட்சம் அபராதமும், ஆயுள் தண்டனையும் விதித்தார்.
அத்துடன் அபராத தொகையை கட்ட முடியாமல் போனால் மேலும் ஒரு வருடம் சிறை தண்டனை என்று உத்தரவிடப்பட்டுள்ளது. அத்துடன் கொலை மிரட்டல் விடுத்த வழக்கிலும் இரு வருட சிறை தண்டனை விதித்து தீர்ப்பளிக்கப்பட்டது.
இதில், பாதிக்கப்பட்ட சிறுமைக்கு ரூபாய் 5 லட்சம் வழங்க அரசுக்கு உத்தரவு பிறப்பித்தார். இது குறித்த தீர்ப்பை கேட்டவுடன் குற்றவாளி காமராஜ் கதறி அழுது நெஞ்சில் அடித்துக் கொண்டு, "எனக்கு நடந்தது யாருக்குமே நடக்கக்கூடாது தாயே." என்று அழுதுள்ளார். இதையடுத்து அவரை போலீசார் சிறைக்கு இழுத்துச் சென்றனர்.
English Summary
pudhukottai pocso criminal crying in court